பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 கினியரும் பன்னிரு படலத்தைப் 'புதுநூல் என்றே கருதுகின்றார். அப் புதுநூல் வானோர் வேண்டத் தென்திசைப் பொதியம் போந்திருந்த அகத்தியமுனிவர் தன்பாற்றண்டமிழ் உணர்ந்த பிற்காலத் தொல்காப்பியன் முதல் பன்னிருபுலவரும் பாடியதாகும். இப்பன்னிருபடலம் பொருளிலக்கணத்தை அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்று நான்காகப் பகுக்கிறது. வெட்சி, வெட்சியின் எதிர் கரந்தை; வஞ்சி வஞ்சியின் எதிர் காஞ்சி, உழிஞை உழிஞையின் எதிர் நொச்சி என்று கூறுகிறது. தொல்காப்பியர் அகத்திணை ஏழ் என்று கூறி, அவ்வேழனுடன் இயைபுபடுத்திக் கூறாமல் வாகை புறத்திணையை ஒதுகின்றது. இவ்வாறு கூறுகின்ற நெறி பன்னிருபடல நெறியாகும். இந்நெறிக்கு முதல்வர் அகத்தியராவார். யாப்பருங்கல விருத்தியில் எடுத்துக்காட்டப்பட் தகைபெறு பொதியிலெந் தலைவ னாணையின் தொகைவகை விரிபடச் சொற்ற நூல்களுள் வகையுள் சேர்த்து வகுப்பர் ஆதலால் நகைபெற நாலசை நடப்ப தில்லையே (யாப்பருங்கல விருத்தி, பக். 437) என்னும் பாட்டும் அகத்தியர் ஆணையால் சொல்லப்பட்ட நூல்கள் என்று வருவதை நோக்கினால் பன்னிருபடலம் முதலியவை அகத்தியர் ஆணையால் எழுந்த நூல்களாகும். இது தொல்காப்பியத்துடன் பொருளிலக்கண முறையில் மாறுபடுகின்றது. கூறிய குன்றினும் முதுநூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்றன் ஆணையிற் றமிழ்அறிந் தோர்க்குக் கடனே (பேராசிரியர் உரை மேற்கொள் மரபியல் - 95) என்னும் நூற்பாவால் அகத்தியர் ஆணையால் நூல் செய்தல் போலத் தொல்காப்பியர் ஆணையைப் பின்பற்றி எழுந்த நூல்களும் உள. தொல்காப்பியர் கூறும் பொரு ளிலக்கண நெறி வேறு என்பது மேலே காட்டப்பட்டது.