பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அதுபோல் தொல்காப்பியர் கூறும் செய்யுளிலக்கண நெறியும் அகத்தியர் கூறும் செய்யுளிலக்கண நெறியும் வெவ்வேறாகும். 1. தொல்காப்பியர் மாத்திரை முதல் இருபத்தாறு உறுப்பும் அம்மை முதலான எட்டு யாப்பலங்காரமும் செய்யுட்கு உரியதாகக் கூறுகிறார். அகத்தியர் எழுத்து முதல் ஆறு உறுப்புக்களை மட்டும் செய்யுட்குரியதாகக் கூறுகிறார். 2. தொல்காப்பியர் தளை என்பதை ஒர் உறுப்பாகக் கொண்டிலர். அவர் தளையை ஒர் உறுப்பாகக் கொள்கின்றார். 3. தொல்காப்பியர் நேர், நிரைபு, நேர்பு, நிரைபு என்னும் நான்கசை சொல்கின்றார். அவர் நேர், நிரை என்னும் இரண்டசையே கொள்கின்றனர். 4. தொல்காப்பியர் பெரும்பாலும் நாற்சீரடியுள் கட்டளையடிகளையேகொண்டு அவற்றால் ஆசிரியம், வெண்பா கலிப்பாக்களை ஆக்கிக் கொள்கின்றனர். சீர்வகை அடியில் குறளடி சிந்தடிகளைக் கொண்டு வஞ்சிப்பாவை ஆக்கிக் கொள்கின்றார். பாவினம் கொண்டிலர், அவர் சீர்வகை அடிகளையே கொண்டு, பா, பாவினங்களை யெல்லாம் அவற்றால் அமைத்துக் கொள்வர். 5. தொல்காப்பியர் ஆசிரியப்பாவையே முதற்பாவாகக் கருதி ஆசிரியநடைத்தே வஞ்சி என்பர். வெண்பாவை ஒன்றாம் நிலையில் நிறுத்தி வெண்பாநடைத்துக் கலி என்று கூறுகின்றார். அவர் வெண்பாவை முதலாக வைத்து வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்ற முறையில் கூறிச் செல்கின்றார். வெண்பாவை முதலாகக் கொள்வது அகத்தியநெறி, ஆசிரியப்பாவை முதலாகக் கொள்வது தொல்காப்பிய நெறி. இன்னும் இவர் இருவர்க்கும் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் தொல்காப்பியர் நெறியைப் போல் அகத்தியர் நெறி பழமை வாய்ந்ததன்று. தொல்காப்பியர் நெறிக்குப் பிற்பட வழங்கத் தொடங்கியது அது. பொருளிக்கணமும் மேற்கூறிய செய்யுளிலக்கண நெறிபோல் இருவர்க்கும் வேறுபட்டே செல்கின்றது.