பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தொல்காப்பியத்திற் சில திறனாய்வு முறைகள் மிகப் பழைய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலானது திறனாய்வு முறைகளிற் சிலவற்றை நமக்கு நினைவூட்டுகின்றது. அது நூல்களைப் (இலக்கண நூல்கள்) பற்றிக் கூறத் தொடங்குங்கால், நூல்கள் முதல் நூலும், வழிநூலும் என இரண்டு வகையாகும் என்று கூறுகின்றது. "மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை இயல முதலும் வழியுமென நுதலிய நெறியின" (மரபியல் - 93) என்பது அந்நூற்பாவாகும். இறையனார் களவியல் உரையும் நன்னூலும், யாப்பருங்கல விருத்தியுரையும் நூல்கள் முதல் மாலும், வழிநூலும், சார்பு நூலும் என மூவகையாகும் என்று கூறுகின்றது. "முதல்வழி சார்பென நூல்மூன் றாகும்" என்பது அந்நூற்பாவாகும். தொல்காப்பியர் நூல் இரண்டு என்று சொல்லக் களவியல் உரையாசிரியர் முதலியோர் நூல் மூன்று என்று கூறுவானேன் என்று வினா எழுகின்றது. தொல்காப்பியர் காலத்தில் முதல் நூல், வழி நூல் என இரண்டே இருந்தன. அதன் பிற்காலத்தில் சார்பு மாலும் எழுந்தது. இலக்கியம் நோக்கி, இலக்கணம் எழுதுதலே முறையாதலின், தொல்காப்பியர் காலத்தில் இருவகை நூலே இருந்ததாதலின், அவர் அவ்விரண்டிற்கு இலக்கணம் வகுத்தார். களவியல் உரை முதலானவற்றின் காலத்தில் மூவகை நூல் எழுந்ததால் அவற்றிற்கெல்லாம் இலக்கணம் எழுதப்பட்டன. தொல்காப்பியர் தொல்காப்பியத்துள் என்மனார், புலவர் உணர்ந்தோர் கண்ட ஆறு, புலன் நன்கு உணர்ந்த புலமையோர், குறி அறிந்தோர், நூல்நவில் புலவர் நுவன்