பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 றறைந்தனர், தொன்மொழிப் புலவர் என்பன முதலான வற்றால் முதல் நூல் ஆசிரியர்களைக் குறிப்பிடுதல் காண்க. வடவேங்கடம் தென்குமரி ஆயிடையே உள்ள நீண்ட பரந்த தமிழ்நிலப் பரப்பிலே பல முதல் நூல்கள் இருந்திருக்க வேண்டும். அவர்களையெல்லாம் தொல்காப்பியர் பலர்பாற் சொல்லாற் கூறுகிறார். இறையனார் களவியலுரை முதல் நூலின் இலக்கணத்தை, "முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்" "முனைவன் நூற்குப் பிறன்கோள் கூறாது" "தந்திரம் சூத்திரம் விருத்தி மூன்றற்கும் முந்துநூல் இல்லாது முதல்நூல் ஆகும் என்று கூறியுள்ளது. இவற்றையெல்லாம் கருதினால், காலத்தை இலக்கணம் எழுதப்பெறாமல் இலக்கியமே வழங்கிய காலமென்றும் இலக்கணம் எழுதப்பட்ட காலம் என்றும் இரண்டு விதமாகப் பிரித்து வழங்கலாம் என்க. இலக்கணம் எழுதப்பட்ட காலத்தையும், முதனுால் மட்டும் வழங்கிய காலம், முதல் நூலின்பின் வழிநூல் எழுந்து வழங்கியகாலம், அவ்விரண்டின் பின் சார்புநூல் எழுந்து வழங்கிய காலம் என்று மூன்றாகப் பிரித்து வழங்கலாம். மேற்குறிப்பிட்ட மூன்று வகையான காலத்தில் தொல் காப்பியர் காலம், முதனூலின் பின் வழிநூல் எழுந்து வழங்கிய காலமாகும். முதல் நூல், இலக்கிய காலத்தின் பின் எழுந்ததாதலின், இலக்கியங்களின் அமைப்பை மட்டும் நோக்கியே அது எழுதப்பட்டிருக்கும். வழிநூல் எழுதும் புலவன் இலக்கிய அமைப்பையும், முதனுல் அமைப்பையும் ஆராய்ந்து எழுதுவான். தொல்காப்பியம் தமிழ்கூறு நல் உலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிருமுதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடியும், முந்துநூல் கண்டும், பின்னர் கிடைத்த இலக்கண விதிகளை முறைப்பட எண்ணியும் தொகுக்கப்பட்ட நூல் என்று அதன் பாயிரம் கூறுகின்றது. பாயிரம் முறைப்பட எண்ணி என்று கூறுகின்றது. முறைப்பட எண்ணுதல் திறனாய்வாளன் செய்ய வேண்டிய வேலைகளுள் ஒன்றாகும்.