பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 இலக்கண நூல் எழுதுபவன் முன்னே அதிகாரங்களை முறையாக வைக்க வேண்டும். இதனைத் தொல்காப்பியர் அதிகார வகை என்றும் நன்னூலாசிரியர் ஒத்துமுறை வைப்பு என்றும் கூறுவர். பின்னர் இலக்கணப் பொருள் களைக் கூறும்பொழுது, தொகுத்தும் வகுத்தும் கூறல் வேண்டும் என்பதைத் தொல்காப்பியர் தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந்நிறுத்தல் என்பர். நன்னூலாசிரியர் தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல் என்பர். தொல்காப்பியர் தம் நூலுள் எழுத்ததிகாரம், சொல்லதி காரம், பொருளதிகாரம் எனப் பெயர் அமைத்திருப்பதையும், பொருளறிவுறுத்தும் சூத்திரம் போலவே கொண்டு அவற்றிற்குப் பொருளெழுதிச் செல்வர் உரையாசிரியர். இளம்பூரணர் எழுத்ததிகாரத் தொடக்கத்தே எழுத் துணர்த்தின காரணத்தால் எழுத்ததிகாரம் என்னும் பெயர் பெற்றதென்பர். அதன் பின் எழுத்து எனைத்து வகையான் உணர்த்தினானோவெனின், எட்டு வகையானும், எட்டிறந்த பலவகையானும் உணர்த்தினான் என்பது. அவற்றுள் எட்டுவகையாவன:- எழுத்து இனைத்து என்றலும், 1 இன்ன பெயர என்றலும், 2 இன்ன முறைய வென்றலும், 3 இன்ன அளவின வென்றலும், 4 இன்ன பிறப்பின வென்றலும், 5 இன்ன புணர்ச்சியவென்றலும், 6 இன்ன வடிவினவென்றலும், 7 இன்ன தன்மைய வென்றலும், 8 என இவை. இனி எட்டிறந்த ԼյaՆ}Զ16Ծ) 55tԼIITGN16ծT:- உண்மைத் தன்மையும், குறைவும், கூட்டமும், பிரிவும், மயக்கமும், மொழியாக்கமும், நிலையும், இனமும், ஒன்று பலவாதலும், திரிந்ததன் திரிபது வென்றலும், பிறிதென்றலும், அதுவும் பிரிதுமென்றலும், நிலையிற்றென்றலும், நிலையாதென்றலும், நிலையிற்று நிலையாதென்றலும் இன்னோரன்னவு மென்ன இவை" என்று எழுத்திலக்கணத்தை வகைப்படுத்திக் கூறு கின்றார். இப்படி வகைப்படுத்திக் கூறுதல் திறனாய்வு வகைகளில் ஒன்றாகும்.