பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

←%# #Ꭾr தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் வாகி இயன்று வருதலானும், இயலசையான் வரும் ஈரசைச் சீராகலானும், இவற்றை ஒருபாவிற் குரிமைசுறுதல் அரிதாக லானும் இவற்றை இயற்சீரென்றான். எனவே, சொல்லின் முடியும் இலக்கணத்தால் நான்குபாவிற்கும் உரியவென்பது உம் ஈண்டுப் பெற்றாம். அல்லது உம் அவற்றைத் தளைகூறும்வழி மூன்றுபாவிற்கும் உரிமைகறிக் கலிப்பாவிற்கும் வஞ்சிப்பா விற்கும் நேரீற்றியற்சீர் வாராவென, ஒழிந்தசீர் வருமென்ப துடன்பட்டமையானும் நான்கு பாவிற்கும் இயன்றுவருமென்பது பெற்றாம். ஆசிரியவுரிச்சீர் என்றது.ாஉம் அவ்வாறே ஆட்சியும் குணனும் நோக்கிய பெயர். ஆட்சி, 'வெண்பாவுரிச்சீர் ஆசிரியவுரிச்சீர்’ (335) எனவும் பிறாண்டும் ஆளுப. உரியசை மயக்கமாகலானும் ஆசிரியத்திற் குரிமையானும் இக்குறி குணங் காரணமாயிற்று.2 மற்றிவை இயற்சீர்போல ஒரோர் சொல்லாய் யாண்டும் நிற்ற லில்லை பிறவெனின், அற்றன்று, தோன்றுவாக்கு இரங்குவாக்கு என்றாற்போல்வன உளவென்பது. இனி, இவ்வியற்சீர்தாமும் இரண்டுசொற் கூடியும் ஒன்றாகிய வழியே சீரெனப்படும்; அது போல இவையும், “எல்லாத் தொகையு மொருசொன் னடைய” (தொல். சொல். எச்ச. 14) என்பதனான் ஒரு சொல்லாயினவெனினும் அமையும். மற்று ஒழிந்த இயற்சீருங் கூறாது: ஆசிரியவுரிச்சீர் ஈண்டுவைத்த T 1. இயல்புவகையால் ஒவ்வொன்றாகி நின்ற அசைச்சொற்களால் பெரும் பாலும் இயன்று நான்குயாவிற்கும் உரிமையுடைய இயல்பினவாய் வருதலால் இயலசையால் இயன்றுவரும் ஈரசசைச்சீர்கள் நான்கும் குணங்காரணமாகவும் நூலிற்பலமுறை எடுத்தாளப்பெறும் ஆட்சிபற்றியும் இயற்சீர் எனப்பெயர் பெற்றன. 2. உரியசை மயக்கமாகிய ஈரசைச்சீர் நான்கும் ஆசிரியப்பாவிற்குரிமையுடைமையாகிய குணங்காரணமாகவும் வெண்பாவுரிச்சீர் ஆசிரியவுரிச்சீர் என்றாங்கு நூலில் ஆளப்பெறும் ஆட்சிபற்றிய வழக்கத்தினாலும் ஆசிரியவுரிச்சீர் எனப்பெயர் பெற்றன. 3. ஒழிந்த இயற்சீர் என்றது, இயலசையும் உரியசையும் விரவியமைந்த ஈரசைச் சீர் எட்டனுள் உரியசைப் பின்னர் நிரையசை வருவனவாகிய நேர்புநிரை (நீடுகொடி) நிரைபுநிரை (குளிறுபுலி) என்னும் உரியசைச்சீர் இரண்டும் நீங்கலாக நேர்புநேர் (சேற்றுக்கால்), ரைபுநேர் (களிற்றுத்தாள்), நேர்நேர்பு