பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ-ள்.) தளையுந் தொடையும் அடியின்கண்ன என்ற வாறு. {Bட உ} இதுவுமது. நாற்சீரடியது சிறப்புணர்த்துதல் நுதலிற்று. எதிரது நோக்கியதொரு கருவியெனினும் அமையும், (இ - ள்). முன்னர்க்கூறிய நாற்சீரடியுள் உள்ளனவே தளையுந் தொடையும் (எ-று).2 மற்று, மாத்திரையும் எழுத்தும் அசையுஞ் சீரும் அவ்வடி யுள்ளன அல்லவோவெனின், அற்றன்று; அவ்வடிக்கணுள்ளன வெல்லாங் கூறுகின்றானல்லன் இதுவென்பது. என்னை? நாம் தளைப்பகுதியாற் கட்டளையடியென உறழ்வது உம் அறுநூற் றிருபத்தைந்தடியென வரையறை கூறுவது உம் அவ்வளவடியே என்றற்கு நாற்சீர்க்கண்ணது தளை யென்றானென்பது. முன் னுஞ் சீர்வகையான் வகுக்கும் அடியன்றிக் கட்டளையடி யெல்லாந் தளைவகையுடையவென விதந்தோதி வந்ததனானே நாம்தளைகொள்வது நாற்சீரடிக்கனென்பான் அடியுள்ளன தளை யென்றானென்பது. மற்றையடிக்கட் டளைகொள்ளின் அது வரையறையின்றா மாகலின் ஈண்டு வரைந்தோதினானென் 1. மேற்குறித்த நாற்சீரடியுள்வைத்து விளக்கத்தக்கனவே பாவுக்குரிய சீர்ப்பிணிப்பாகிய தளைத்தற்றொழிலும் மோனை யெதுகை முதலாகப் பின்னர்க் கூறப்படும் தொடையுறுப்புக்களும் என்பதாம். நாற்சீரடியின் மிக்க நெடிலடி கழிநெடிலடி யென்பவற்றில் தளைத்தற் றொழிலும் தொடைக் கூறுபாடும் உள்ளனவாயினும் அவை இத்துணைய என எண்ணி வரையறைப்படுத்தற்குரிய வரம்பினைக் கடந்தனவாதலானும் எல்லாப் பாதடைக்கும் மூலமாகிய ஆசிரியம் வெண்பா என்னும் இருவகைப்பாக்களும் நாற்சீரடியிலேயே இயன்றனவாதலாலும் நாற்சீரடியுள் உள்ளனவே தளையும் தொடையும் என்றார் தொல்காப்பியனார். தளையென்பது செய்யுளுறுப்பன்று: நின்றசீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் நேர்முன்நேர், திரைமுன்நிரை என ஒன்றியும், நேர்முன்நிரை. நிரை முன்நேர் என ஒன்றாமலும் தளைக்கப்படுதலாகிய தொழிற்றன்மையேயாகும். எனவே இதனைச் செய்யுளுக்குரிய உறுப்புக்களுள் ஒன்றாகத் தொல்காப்பியர் தனித்தெடுத்துக் கூறிற்றிலர். இனித் தொடை என்பது தொடுத்தல் என்னுந் தொழிலையுணர்த்தாது மோனை முதலாகத் தொடுக்கப்பட்டுள்ள எழுத்துச் சொற்பொருட்கூறுபாடுகளையுணர்த்தி சிற்றலின் செய்யுட்குரிய உறுப்புக்களுள் ஒன்றாயிற்று. 2. அடியென்றது முன்னர் க்கூறிய நாற்சீரடி வினை.