பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

分f<─球<鸵y தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் 'நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்து மீஇ' (குறிஞ்சிக்கலி) 'கவிரிதழ் கதுவிய துவரித ழரிவையர் கவிமயிற் கணத்தொடு விளையாட” 'மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரு நான முழுதுலகுமூடி முளைவயிர நாறி” என இவற்றை முறையானே குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி எனப்பெயர் கூறுப; எண்சீரின் மிக்கன சிறப்பில. ஆய்வுரை : நூற்பா-35 இஃது எழுத்தெண்ணி வகுக்கப்பெறும் ஐவகையடிகளுள் குறளடியின் எழுத்து வரையறை கூறுகின்றது. (இ-ஸ்) நாலெத்து முதலாக ஆறெழுத்தீறாக ஏறிய மூன்று நிலத்தையுடையது குறளடி யென்று கூறுவர் ஆசிரியர் எ-மு. நிலத்து-நிலத்தினையுடையது எனக் குறிப்புவினை முற்றாகக் கொண்டு, குறளடி நாலெழுத்து ஆதியாக ஆறெழுத்துவரை ஏறிய நிலத்து’ என முடிக்க. ஆதியாக - முதலாக, எனவே குறளடி நாலெழுத்து, ஐந்தெழுத்து, ஆறெழுத்து என மூன்று நிலம் பெறும் என்றாராயிற்று. நூற்பா 36 இது, கட்டளையடியுட் சிந்தடியாமாறு கூறுகின்றது. (இ-ள்) ஏழெழுத்தென்று சொல்லுவர் சிந்தடிக்கு அளவு: ஒன்பதெழுத்தினைக் கடந்து மிகாதவிடத்து எ-று. எனவே சிந்தடியின் சிற்றெல்லை ஏழெழுத்து எனவும், பேரெல்லை ஒன்பதெழுத்தெனவும், சிந்தடி ஏழெழுத்து, எட்டெழுத்து, ஒன்டதெழுத்து என மூன்று நிலம் பெறும் எனவும் கூறினாராயிற்று. ‘ஈரெழுத்தேற்றம் அல்வழியான’ எனவே பாடங்கொண்டனர் பண்டையுரையாசிரியர்கள். லகரமும் வகரமும் ஏடெழுதுவோரால் வேறுபாடின்றியெழுதப் பெறுதலும் உண்டாதலின் 'அவ்வழியான’ எனப் பாடங்கொண்டு, “சிந்தடிக்குச் சிற்றெல்லை யாகிய அளவு ஏழெழுத்தென்று கூறுவர். அவ்விடத்து இரண். டெழுத்து மிக்குவருதல் அதன் பேரெல்லையாகும்’ எனப்