பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க.க ளஅரு குறளடியொழிந்தனவற்றை இங்ங்னம் வகுத்துரைத்தார், தலை யிடை கடை யென்னும் மூன்று கூற்றான் ஒன்றற்கொன்று சிறப்புமிழிபு முடைமையின். உ-ம். பேர்ந்து..தன்றே இதனுள் நாற்சீரடிக்கட் பதினேழு நிலத்து ஐவகையடியும் முறையானே வந்தவாறு காண்க. மக்களுள் தீரக்குறியானைக் குறளனென்றும், அவனிற் சிறிது நெடியானைச் சிந்தனென்றும், ஒப்பவமைந்தானை அளவிற்பட்டானென்றும், அவனிற் சிறிது நெடியானை நெடியா னென்றும், அவனின் மிகநெடியானைக் கழியநெடியா னென்றும் கூறுபவாகலின் அவைபோலக் கொள்க, இப்பெயர். இவை சீர்வகை யடிக்கும் ஒக்கும் : என்னை? சுருங்கிய வெழுத்தானும் இருசீரானும் வருவன குறளடி எனவும், ஏறியவெழுத்தானும் முச்சீரானும் வருவன சிந்தடி எனவும், இடைநிகரான வெழுத் தானும் நாற்சீரானும் வருவன அளவடி எனவும், மிக்கவெழுத் தானும் ஐஞ்சீரானும் வருவன நெடிலடி எனவும், அவற்றின் மிக்கவெழுத்தானும் அறுசீர் முதலிய சீரானும் வருவன கழிநெடி லடியெனவும் இங்ங்ணம் இருவகையடிக்கும் ஒருபெயரே கொள்க. அவை "ஓங்குதலை வியன்பரப்பின்’ (மதுரைக்காஞ்சி) 'வலமாதிரத்தான் வளிகொட்ப’’ (மதுரைக்காஞ்சி) 'சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே’’ (புறம்-உ ரு) 'சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே' (புறம்-உ ரு) 1. எழுத்தெண்ணி வகுக்கப்படும் ஐவகையடிகளுள் நாலெழுத்து முதல் ஆறெழுத்து வரையுள்ள மூன்று நிலமும் குறளடி என ஒரு தொடராகத் தொகுத்துரைத்த தொல்காப்பியனார், ஏனைய நான்கடிகளைப் பற்றிக் கூறுமிடத்து ஏழெழுத்தென்ப சிந்தடி, ஈரெத்து ஏற்றம் அல்வழி' எனவும் பத்தெழுத்தென்ப நேரடி ஒத்த நாலெழுத்து ஏற்றலங்கடை" எனவும், மூவைந்தெழுத்தே நெடிலடி, ஈரெழுத்துமிகுதலும் இயல்பு' எனவும், மூவாறெழுத்தே கழிநெடிலடி, ஈரெழுத்து மிகுதலும்பெறும்’ எனவும இவ்வாறு அவ்வவ்வடிக்குரிய நிலங்களை முதன்மையும்முதன்மை யின்மையும் புலப்பட இரு தொடர்களாக வகுத்துரைத்தார் என்பது பேராசிரியர், நச்சினார்க்கினியர் என்னும் இருவரது கருத்தாகும். இக்கருத்து தொல்காப்பியனார்க்கு ஏற்புடையது தானா என்பது இங்குச் சிந்தித்தற்குரியதாகும்.