பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கை கண் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் 1.நுந்தை, தேமா; ஞாயிறு, பாதிரி; வேலியது, கணவிரி; போதுபூ, மேவுசீர்; போரேறு, நன்னாணு; பூமருது; காருருமு; கேடியாறு, பெருநாணு; விேறகு தீ உருமுத்தீ; 9மழகளிறு நரை யுருமு என ஒன்பதியற்சீரும் இருநிலைமையாற் பதினெட்டா யின. புளிமா வென்னும் இயற்சீர் ஒருநிலைமைத்தேயாம். அல்லாதார் வரகு என்பதனுட் குற்றுகரங் களைந்து புளிமாவிற்கு இரு நிலைமை காட்டுப; அங்ங்னங் காட்டின் வரகென்பதுபோலப் புளிமாவும் ஒரசையாகவானும், புளிமாவென்பதுபோல வரகு என்பது இரண்டசையாகவானும் கோடல்வேண்டும். கொள்ளவே, இச்சூத்திரத்தினோடு மாறுகோளாமென்பது; என்னை? "எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப' (355) என்றானாகவின் என்பது.2 நீடுகொடி நாணுத்தளை எனவும், உரறுபுலி விரவுகொடி எனவும் நிரையீற்றாசிரியவுரிச்சீ ரிரண்டும் இவ்விரண்டாகி இரு நிலைமை யெய்தியவாறு. இனி, வெண்சீர் நான்கும் ஒரு நிலைமையவேயாம். வண்டு, மின்னு: வரகு, அரவு; என அசைச்சீரிரண்டும் நான்காய் இருநிலைமையவேயாம். இவ்வாற்றான் இவையெல்லாந் தொகுப்ப, இயற்சீர் பத்தொன்பதும், ஆசிரியவுரிச்சீர் நான்கும், அசைச்சீர் நான்கும், வெண்சீர் நான்கும் என முப்பத்தொன்றாயின. என்றார்க்கு, 1. குற்றுகரத்துடன் கூடியதிலையில் எழுத்தெண்ணப்படாமையும் முற்று காத்துடன் கூடியதிலையில் எழுத்தெண்ணப்படுதலும் ஆகிய இருநிலைமை. 2. வரகு" என்னும் உரியசையினைப் புளிமா என்னும் ஈரசைச்சீராகக் கொண்டு வரகு என்பதிற் குற்றியலுகரத்தை நீக்குதலாற் புளிமா' என்பது ஈரெழுத்துச் சீராதலும் உடையதென உதாரணங்காட்டுவாருமுளர். வரகு என்பது திரைபு என்னும் ஒாசைச்சீராதலின் அதனைப் புளிமா என்னும் ஈரசைச்சீராகக் கொள்ளுதல் பொருந்தாது. அவ்வாறு கொள்ளின் வரகு என்பதுபோலப் புளிமா என்பதும் ஓரசைச் சீராம் நிலைமையெய்துதல் வேண்டும். எழுத்தளவு எஞ்சினும் சீர்நிலைதானே குன்றலும் மிகுதலும் இல’ என்னும் விதிப்படி புளிமா' என்னும் ஈரசைச்சீர் ஈரசைச்சீராதவேயன்றி ஓரசைச்சீராதல் இல்லை. எனவே வரகு என்னும் உரியசைச்சீரினைப் "புளிமா' என்னும் ஈரசைச்சீராகக்கொண்டு எழுத்தளவினால் இருநிலைமையெய்துவித்தல் ஆசிரியர் கூறும் சீரிலக்கணத்திற்கு முரணாகும் என்பதாம் .