பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தி உ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் 'தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல்”. (யாப். வி. பக். கOஅ) எனவும் வரும் (சரு) «Guiy m &* ifu uuio : இஃது ஒழிந்த வியநிலை வஞ்சி கூறுகின்றது. (இ-ள்) வஞ்சியடி முச்சீரானும் வரப்பெறும் (எ-று) 'இடனுடைத்து’ என்றதனான் இஃது உறழும் அடிக்கண்ண தன்று என்றவாறு.2 மற்று இருசீரடி வஞ்சிக்கும் இத்துணை யென அடிவிரியுமாறு கூறியதிலனாகலின் இதற்கே வரையறை யின்றென்றது என்னையெனின், இருசீரடிக்காயின் ஒருவாற்றான் உறழ்ச்சிகூறி வரையறுப்பதோராறு கூறினான்; இதற்கு அன்னது உம் இன்றென்பது, மற்று உறழுமடி இல்வழி வஞ்சி யடி இருசீர்த்தாகப்பெறாதோவெனின், அதற்கன்றே முச் சீரானும் வருமென்று உம்மைகூறி இருசீரடியுந் தழி இக் கொண்டு இடனுடைத்து’ என வேறுபடுப்பானாயிற்றென்பது.8 இவ்விரண்டனையும் வஞ்சியடியென வரையாது கூறவே, அவற் றான் வேறுவேறு வருதலும் அவை மயங்கிவருதலுமுடைத்து வஞ்சிப்பாட்டென்பதும் பெறுதும். இக்கருத்தானே அவற்றைக் குறளடிவஞ்சியெனவுஞ் சிந்தடிவஞ்சியெனவும் மயக்கடிவஞ்சி யெனவுஞ் சொல்லுப. சிந்தடியான் வருதல் சிறுபான்மையெனக் கொள்க.4 (எச) நச்சினார்க்கிணிையம் : இஃது ஒழிந்த வியநிலை வஞ்சி கூறுகின்றது. (இ-ள்) வஞ்சியடி இருசீரானன்றிச் சிறுபான்மை முச்சீரானும் வரப்பெறும், எறு. 1. வியநிலைவஞ்சி-சிந்தடி வஞ்சிப்பா. 2. சிந்தடிவஞ்சிப்பாவாகிய இதன் கண் எழுத்தெண்ணிக் கட்டளையடி கொள்ளும் வழக்கம் இல்லையென்றவாறு. 3. வேறுபடுத்தலாவது இருசீரடி கட்டளையடியாக வைத்து உறழப்பெறுதலும், முச்சீரடி அங்ங்னம் அ. முழப்பெறாமையும் ஆகும். 4. இருசீரடிகளால் இயன்றது குறளடி வஞ்சிப்பா. முச்சீரடிகளால் இயன்றது சிந்தடி வஞ்சிப்பா. இருசீரடிகளும் முச்சீரடிகளும் கலந்து வருவது மயக்கடி வஞ்சிப்பா.