பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சஅ 龜一勒 (5 முன்பக்கத் தொடர்ச்சி வெண்சீரடி 232 இயற்சீர்பத்தும் வெண்சீர்நான்கும் என வெண்பாவிற்குப் பதினான்கு சீர் வரும். அவை இரண்டெழுத்துச்சீர், மூன்றெழுத்துச்சீர், நான்கெழுத்துச்சீர், ஐந்தெழுத்துச்சீர் என நான்கு வகைப்படும். ஈரெழுத்துச்சீர்கள் தேமா, பாதிரி, போதுபூ, போரேறு, என்பன. அவற்றுள் 'தேமா எட்டெழுத்தடிமுதலாகப் பதினாறெழுத்தடிவரை 9 அடியாகும். பாதிரி, போதுபூ, போரேறு என்பன மூன்றும் ஏழெழுத்தடி முதலாகப் பதினைந்தெழுத் தடி வரை ஒன்பதடிகளாக 3 X9-27 அடியாகும். ஆக ஈரெழுத்துச்சீர் நான்கினாலும் ஆக்கப்பட்ட வெண்பாவின் அடித்தொகை 38 . மூவெழுத்துச்சீர்கள் : பாதிரி, மாசெல்வாய், மாபடுவாய், புளிமா, போதுபூ, போரேறு, பூமருது, விறகுதி, கடியாறு என ஒன்பது சீர்கள். அவற்றுள் விறகுதி 'கடியாறு' என்னும் இருசீரும் ஏழெழுத்தடிமுதல் பதினாறெழுத்தடிவரையுயர்ந்த அடிகள் ஒவ்வொன்றிற்கும் பத்துப்பத்தாக இரு பதடிகளாகும். ஒழிந்த சீர்கள் ஏழும் எட்டெழுத்தடிமுதலாகப் பதனாறெழுத்தடி வரை உயர்ந்த ஒன்பதடிகளும் பெற்று 7 ×9 = 63 அடிகளாகும். ஆக மூவெழுத்துச்சீர்கள் ஒன்பதினாலும் ஆக்கப்பட்ட வெண்பாவின் அடித் தொகை 83 . நான்கெழுத்துச்சீர்கள்: கணவிரி, பூமருது, கடியாது, மழகளிறு மாபடுவாய், விறகுதி, புலிசெல்வாய், என ஏழாகும். இவற்றுள், பூமருது மாபடுவாய்' என இரண்டும் ஒன்பதெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்தடி வரையுயர்ந்த எட்டு நிலமும் பெற்று 8X2=16 அடியாகும். ஒழிந்த ஐந்து சீர்களும் எட்டெழுத்தடி முதலாகப் பதினாறெழுத் தடிவரையுயர்ந்த ஒன்பது நிலமும் பெற்று 9x5=45 அடிகளாம். ஆக நாலெழுத்துச்சீர்கள் ஒன்பதினாலும் ஆக்கப்பட்ட வெண்பாவின் - அடித்தொகை 61. ஐந்தெழுத்துச்சீர்கள்; மழகளிறு, புலிபடுவாய் - இவை இரண்டும் ஒன்பதெழுத் தடிமுதலாகப் பதினாறெழுத்தடி வரையும் உயர்ந்த எட்டு நிலமும் பெற்று 8×2=16 அடியாகும் ஆக, வெண்பாவிற்குச் சீராலாம் அடித்தொகை 196. வெண்பாவினுள் அசைச்சீர் வெண்பாவினுள் நான்கசைகளும் சீராகுமிடத்து ஒரெழுத்துச்சீர், ஈரெழுத்துச் சீர், மூவெழுத்துச்சீர் என மூன்று நிலைமையின. ஒரெழுத்துச்சீர்கள் நேர், நேர்பு, ஏழெழுத்தடி ழுதலாகப் பதினைந்தெழுத்தடிவரையுயர ஒரோஒன்றிற்கு ஒன்பதாக இரண்டிற்குமாய்ப் பதினெட்டாகும். அவ்விரண்டினையும் தேமா' என்னும் சீராகக் கொள்ள அலகு நிலையால் ஒன்பதடிகளேயாகும் , (9)