பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சக உகுக அடிக்கே உறழ்ச்சி கூறுவதென்று ஒரெல்லை கூறிக்கொள்ளல் வேண்டும். கொள்ளவே, எத்துணையிடஞ் சென்றக்காலும், இத்துணையென வரையறைப்பாடு உடையனவல்ல அவ்வரை யறை இன்மையின் அதனை அளவிலவென்பதற்கொரு காரணங் கூறல்வேண்டு மாதலான் அதுநோக்கி நாற்சீரடி சிறப்புடைத் தென வேறுபல காரணங்கூறி, அவற்றுக்கே வரையறைகூறி அல்லனவற்றுக்கட் சொல்லப்படாதென்றான் இச்சூத்திரத்தா னென்பது. அஃதேல் அவை சிறப்புடையவாயினமைக்குக் காரணங் கூறியவாற்றாற் சான்றோர் செய்யுளுட் பயின்றுவரல் வேண்டும் பிறவெனின், இந்நூல் செய்த காலத்துத் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாரும் அவ்வாறு கட்டளையடியாற் பயின்றுவரச் செய்யுள் செய்தாரென்பது இச்சூத்திரங்களாற் பெறுது மென்பது. இதன் முதனூல் செய்த ஆசிரியனாற் செய்யப்பட்ட யாழ்நூலுள்ளுஞ் சாதியும் உவமத்துருவுத் திருவிரியிசையுமெனக் கூறப்பட்டவற்றுட் கட்டளைப்பாட்டுச் சிறப்புடையன சாதிப் 1. சீராலும் எழுத்தாலும் அடிகளைப் பெருக்கிக்காணுவோர் இத்துணைச் சீர்களால் இயன்ற அடிக்கே பெருக்குத் தொகை கூறுவதென்று ஒரெல்லை கூறிக் கொள்ளுதல் இன்றியமையாதது. இவ்வாறு கொள்ளவே எத்துணையளவு ஒரடிக்குரிய சீர்களை மிகுதியாக வைத்து அடிப்பெருக்கம் கூறத்தொடங்கினாலும் அவ்வடிகள் இன்னதொகையின என அடக்கும் வரையறையில்லாதனவாய் விரிதலில், இங்ங்னம் பெருக்கிக்காணும் அடிகள் ஒர் வரையறைக்கு உட்பட்டன அல்ல என்ற முடிவுக்கே வரவேண்டிய நிலையேற்படும். ஆகவே ஆசிரியர் தொல்காப்பியனார் நாற்சீரடியினையே சிறப்புடைய அடியாகக்கொண்டு எழுத்தளவாற் பதினேழ்நிலத்தனவாகிய அவ்வடிகளைக் குறள், சிந்து, அளவு, நெடில், கழிநெடில் என ஐவகையடிகளாகப் பகுத்துக்கொண்டு அவ்வடிகளுக்கே அறுநூற்றிருபத்தைந்தாகும் என மேலைச் சூத்திரத்தில் வரையறை கூறி, இத் நாற்சீரடிபோன்று ஐஞ்சீரடிமுதலிய ஏனைய அடிகளைப் பெருக்கிக் காணப்புகின் அச்செயல், எழுத்தெண்ணி வரையறுக்கப்பட்ட இலக்கணக்கட்டளையின் வரை. யறைக்கு அடங்காமையால், நாற்சீரடியின் இகந்த அவையெல்லாம் எழுத்தெண்ணிக் கட்டளையடியாக உறழ்ந்து காட்டப்படா என இச்சூத்திரத்தால் தெளிவுபடுத்தினார் என்பதாம். 2. ஆசிரியர் தொல்காப்பியனாரால் இந்நூல் செய்த தலைச்சங்கத்திறுதியி. லும் இடைச்சங்கத்திலும் வாழ்ந்த தலைச்சங்கப்புலவர்களும் இடைச்சங்கப்புலவர் களும் நாற்சீரடிக்கண் எழுத்தெண்ணிவகுக்கப்பெறும் கட்ளையடிபயிலச் செய்யுள் செய்தார்கள் என்பது இத்தொல்காப்பியச் சூத்திரங்களால் அறியப்பெறுகின்றோமாதலால் இவை சிறப்புடையவாயின என்னும் காரணம் பற்றியே கட்டளையடிகள் இங்கு விரித்துரைக்கப்பெற்றன என்பது கருத்து.