பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சி கூ உருங் பிற்காலத்தார் அளவடியாற் பயின்றுவரச் செய்யுள் செய்தில ரென்று கடைச்சங்கத்தார் செய்யுள் செய்த அடியுஞ் சிறப்பில வாமோவென்பது.1 வஞ்சியடிக்கும் இங்ங்ணம் வரையறையின்மைய தொக்கும். அது முன்னர்ச் சொல்லுதும். (ருக) நச்சினார்க்கினியம் : இஃது ஒழிந்த நான்கடியையும் நாற்சீரடிபோல வுறழ்க என்பார்க்கு அவையுறழாமைக்குக் காரணங்கூறுகின்றது. இ-ள். ஆங்ங்னம் ...... தனவே எ-து அந்நாற்சீரடிபோல மற்றை நான்கடியினையும் விரிப்பின் அவை இலக்கணங்கூறுதற்கு வரையறைப்படாது எண்ணிறந்தனவாம். பாங்கு ... ...காலை எ-து பகுதியுற வறிந்தோர் விரிக்குங்காலத்து. எ. று. முதனூலாசிரியர் சிறப்புடையனவற்றிற்கும் சிறப்பில்லன. வற்றிற்கும் ஒருங்கிலக்கணங்கூறின் அவையொத்த விலக்கணத்தவாமென்று கருதி வரையறைப் படுவனவற்றிற்கே இலக்கணங்கூறி வரையறையின்றிப் பரந்தனவற்றிற்கு இலக்கணங் கூறிற்றிலர். அவர் கருத்து நோக்கி இவ்வாசிரியரும் யானும் அவ்வாறே கூறினேமென்று கூறியதாயிற்று இதன் கருத்து . ஆயிற் சிறப்புடைய கட்டளையடி சான்றோர் செய்யுளுட் பயின்றுவரல் வேண்டும் பிறவெனின்; இத்நூல் செய்த காலத்திற் றலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாருங் கட்டளையடி பயின்றுவரச் செய்யுள் செய்தார் என்பது இச்சூத்திரங்களாற் பெறுதும். பின்பு கடைச் சங்கத்தார்க்கு அஃதரிதாகலிற் சீர்வகையடிபயிலச் செய்யுள் செய்தாரென்றுணர்க. இக்காலத்தார் அளவடியாற் செய்யுள் செய்திலரென்று கடைச் சங்கத்தார் செய்த அளவடி சிறப்பின்றாகாததுபோல அதுவும் கொள்க.2 வஞ்சிக்கு வரையறைப்படும்படி குறளடி முதலா' (செய்-ருஎ)என்பதனுட் கூறுதும். - 1 . பிற்காலத்தார் அளவடியாற் செய்திலர் என்பதுகொண்டு முற்காலத்துச் சங்கத்தார் செய்த அளவடியும் சிறப்பிலவென்று கூறுதல் பொருந்தாதவாறுபோலக் கடைச்சங்கத்தார் கட்டளையடியமையச் செய்யாமை கொண்டு அவர்க்கு முற்பட்ட தொல்காப்பியனார் காலத்து வழங்கிய கட்டளையடியினைச் சிறப்பிலவென்றுகொள்ளுதலும் பொருத்தாது என்பதாம். 2. இக்காலத்தார் அளவடியிற் செய்யுள் செய்திவர் என்று கொண்டு அளவடி சிறப்புடையதன்று எனக் கொள்ளுதல் பொருந்தாது. அதுபோலவே கடைச்சங்கத்தார் கட்டளையடி பயின்றுவரச் செய்யுள் செய்திலர் எனக்கொண்டு கட்டளையடி சிறப்புடையதன்று எனக்கொள்ளுதல் பொருந்தாது என்பதாம்,