பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய்கல்லார் மீ W - * . மிளிர்வி கர்ண் கர் மணற்கி விளக்கு மேழைமைகளிர்க்கே யெறிநீர்க் கை’ எனவுரும்; இவை கொச்சகக்கலி : 'வரைபுரை திரைபோழ்ந்து மணநாறு நறுநுதல் பொருட்டு வந்தோய்” என ஆசிரியத்தளையானும் அறுசீரடி வந்தது. கட்டளையன்றேற் றளையென்றதனை நாற்சீரடிக்குத் தளை. கோட லின்றென்றார்; இவற்றிற்குத் தளை வரையறை யின்று. இவற்றைப் பின்னுள்ளோர் இனமென்பர்.2 ஆய்வுரை : இதுவும் அது. (இ-ள்) அறுசீரடி ஆசிரியத்தளையொடு பொருந்தி (ஆசிரியப். பாவின்கண்) நேரடிக்கு முன்னாக நடைபெற்றுவரும் எ-று. நேரடி - நாற்சீரடி, உதாரணம் : முன்னையுரைகளிற் காண்க. இச்சூத்திரமும் கலிப்பாவிற்குரிய அடி கூறியதாகக் கொள்வர் பேராசிரியர். 1. பாக்கட்டளை யிடைவிட்டகறி" என்றிருத்தல் பொருத்தமாகும். 2. இவ்வுரைப் பகுதியின் பொருள் நன்கு விளங்கவில்லை, தளை என்று | ஒதும் வழியெல்லாம் எழுத்தெண்ணி வகுக்கப்படும் கட்டளையடிக்குரிய இலக்கணமாகக் கொள்ளவேண்டும் என்பது தொல்காப்பியனார் கருத்தாகும். அங்கனம் எழுத்தெண்ணிக் கொள்ளப்படுவன நாற்சீராகிய அளவடிகளேயாம். இந்நூற்பாவிற் கூறப்படும் அறுசீரடியினை ஆசிரியத் தளையென்றல் பொருந்துமா என்பது கேள்வி. இக்கேள்விக்கு விடை யாகத் தளையென்றது அடிவரையறை என இச்சூத்திரவுரையிற் பேராசிரியர் விளக்கந் தருவர். பேராசிரியர் உரைப்பகுதி கொண்டு மேற்குறித்த நச்சினார்க்கினியர் உரைப்பகுதிக்கு விளக்கம் காண. முயலுதல் வேண்டும்.