பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எச க. குரு இது சொல்ல வேண்டிய தென்னை? "செய்யுட்பாடுவார்க்கு இயல் பன்றோ எனின் ஈண்டுச் செய்யுளுறுப்புள் ஒதுகின்றாராதலின் யாதானு மொருபொருட்கட் பலசொற் றொடுத்து வழங்குங்கால் குறித்த பொருளை முடிக்கவேண்டுஞ் சொல்லே சேர்த்துக் கூறல்வேண்டும் எனவும் அது மிகாமற் குறையாமற் கூறல்வேண்டும் எனவும் இலக்கணங் கூறல் வேண்டும் என்க. அதன் வகை முன்னர்க் காட்டுதும். (இாச} இஃது, 'யாத்த சீரே யடியாப் பெனாஅ’ (தொல்-செய்.1) என நிறுத்த முறையானே அடியுணர்த்தி யாப்புணர்த்து கின்றது. (இ - ள்.) எழுத்துமுதலா சண்டிய அடியிற் குறித்த பொருள்களை முடிய யாத்தல் யாப்பாவதென்று சொல்லுவர் புலவர் (எ . ) , அடிக்கண்ணே முடியுமெனவே இருசீரு முச்சீருங் கிடப்ப முடியநாட்டினும் நாற்சீர் கொண்டு முடியநாட்டினும் அமையுமென்பது. மாத்திரை முதலாக வென்னாது எழுத்து’ என்ற தென்னையெனின், எழுத்தும் அசையுஞ் சீருங்கொண்டியன்ற ஒரோவடிக்கண்ணே இன்பஞ் செய்யும்; அது பொருட்காய் இன்றியமையாமையின் எழுத்து முதலாக வென்றா னென்டது. "ஈண்டியவடி'யென்பது அவை மூன்றும் ஒன்றாகத் தொடர்ந்து 1. மேற்கூறப்பட்ட அடிகளால் தாம் குறித்தபொருளை முற்றுப்பெற அமைத்தலாகிய யாப்பு என்னும் உறுப்பமையச் செய்யுள் செய்தல் செய்யுள் செய்வாரெல்லார்க்கும் இயல்பாயினும், பாதானுமொரு பொருளின்கண் பல. சொற்றொடுத்து வழங்கும்போது தாம் குறித்தபொருளை முடித்தற்குவேண்டிய சொல்லையே சேர்த்துக் கூறுதல் வேண்டும் எனவும் அந்திலையிற் சொற்கள் மிகாமலும் குறையாமலும் சேர்த்தமைத்தலே யாப்பு என்னும் உறுப்பாம் எனவும் அதற்கு இலக்கணங்கூற வேண்டுதல் இன்றியமை யாமையின், இச்சூத்திசத்தால் யாப்பாவது இதுவென ஆசிரியர் இலக்கணங்கூறினார் என்பது இங்கு இளம்பூரணர்தரும் விளக்கமாகும். அதன்வகை முன்னர் க்காட்டுதும். அல் யாப்பின் வகையினைப் பின்னே அடுத்த சூத்திரவுரையிற்காட்டுவோம். 2. நாட்டல் - யாப்புற அமைத்தல், 3. அவை மூன்றும் எழுத்து, அசை, சீர் என்பன மூன்றும்.