பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

এণ্ড কেক"ি কক্ত ৮ டாக்டர். இராம. பெரியகருப்பன் மதுரை காமராசர் ('தமிழண்ணல்”) பல்கலைக் கழகம், பேராசிரியர், துறைத் தலைவர் மதுரை - 525 021 தமிழியல் துறை, இந்திய மொழிப் புலம் 3–4–1989 தொல்காப்பியம் என்னும் தமிழ் முதல் நூல் இன்னும் உலகிற்கு முறையுற உணர்த்தப்படாமலே இருக்கிறது. தமிழரிலும் அப்பெருநூலைக் கற்றவர்கள் விரல்விட்டு எண்ணத் தக்கவர்களாகி விட்டனர். அரிஸ்டாட்டில், பரதமுனிவர், பாணினி என்ற வரிசையில் வைத்து எண்ணத்தகுந்த இவர்தம் நூற் கருத்துக்கள் உணரப்படாமலும் உணர்த்தப்படாமலும் போவது நினைந்து இரங்கு தற்குரியதாகும். பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் அவர்களைக் கொண்டு தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு உரைவள நூல்களை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருவது மேற்கூறிய குறையினை அகற்றுவதற்கு மிகுதியும் பயன் படும் பணியாகும். இப்பல்கலைக் கழகத்தில் தமிழியற்புலம்’ என்று ஒன்று தொடங்கப்பட்ட பொழுது அதன் முதல் ஆய்வறிஞராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிந்தவர் பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் ஆவார். அவர்கள் இங்குப் பணிசெய்த காலத்தில் புறத்திணையியல் முதல் உவமயியல் ஈறானவற்றிற்கு மட்டுமே உரைவ ளம் பதிப்பை உருவாக் கினார்கள். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் இலக்கியத் துறைத் தலைவராக அவர்கள் செல்ல நேரிட்டதால் செய்யுளியல் மரபியல் ஆகிய இரண்டும் நிறைவுறாமல் எஞ்சி நின்றன. பொருளதிகாரம் முழுமைக்கும் உரைவளம் வேண்டும் என்ற எம் விருப்பத்திற்கிசைய அன்னார் பணியினின்று சென்ற பிறகும் இதே நினைவாக இருந்து, இப்பின்னிரண்டு இயல்களையும் உரை வளப்பதிப்புக்களாக எழுதித் தந்தார்கள். பணியிலிருக்கும் பொழுதே கடமையை மறந்துவிடும் இக்காலத்தில் பணியை விடுத்துச் சென்றபிறகும் கடமையை முடித்துத் தந்த பேராசிரியரது பணி நன்றியறிதலுடன் போற்றத்தக்கதாகும்.