பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருசம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் “ஆயிர வெள்ள வூழி வாழி யாத வாழிய பலவே' இஃது அரசரை வாழ்த்தியது. 'விசும்பிற் றுளிவிழி னல்லான்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது’ (திருக்குறள் - கசு) இது மழையை வாழ்த்தியது. ஒழிந்தன வந்துழிக்காண்க. இவை அறுமுறை வாழ்த்தெனப் பெயர் கூறப்படும். இயலென்றதனான் இயற்கையாய வாழ்த்திவையெனவும், மேல்வரும் புறநிலைவாழ்த்து முதலியன இயற்கையன்றி வாழ்த்தின்பாற் சார்த்தப்படுவன எனவுங்கொள்க. வஞ்சிக்குதாரணம் வந்துழிக்காண்க. 'அங்கண்வானத் தமரரரசர் என்பது பின்னுள்ளோர் கூறிய வாழ்த்தியல். ஆய்வுரை : இது, வாழ்த்துதற் பொருண்மைக்குரிய பாவாமாறு உணர்த்துகின்றது. (இ-ஸ்) வாழ்த்தியல் வகை மேற்கூறிய நான்கு பாவிற்கும் உரியதாகும் எ -று. ‘வாழ்த்தியல் வகை என்றது, தேவரை வாழ்த்துதலும் முனிவரை வாழ்த்துதலும் ஏனையோரை வாழ்த்துதலும் ஆகிய பாகுபாட்டினைக் குறிக்கும் என்றார் இளம்பூரணர். 'வாழ்த்துங் கால் தனக்குப் பயன்படுதலும் படர்க்கைப் பொருட்குப் பயன்படுதலும் என இருவகையான் வாழ்த்தும் என்பது உம், இனி முன்னிலையாக வாழ்த்துதலும் படர்க்கையாக வாழ்த்துதலும் என இருவகைப்படுஉ மென்பது உம் எல்லாங்கொள்க. அங்ங்னம் வாழ்த்தப்படும் பொருளாவன: கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் நாடும் மழையும் என்பன. அவற்றுள் கடவுளை வாழ்த் துஞ் செய்யுள் கடவுள் வாழ்த் தெனப்படும். ஒழிந்த பொருள்களை வாழ்த்திய செய்யுள் அறுவகை வாழ்த்தெனப்படும் என்பது. வாழ்த்தியல் என்றதனான், இயற்கை வாழ்த்து எனப்படுவன (மேற்கூறப்பட்ட) இவையெனவும், இனிவரும் புறநிலை வாழ்த்து முதலிய ஒரு 1. வாழ்த்தியற் பொருளில் வஞ்சிப்பா வந்தமைக்குப் பண்டை இலக்கியங்களில் உதாரணம் கிடைக்காமையால், வஞ்சிக்கு உதாரணம் வந்துழிக் காண்க என்றார். அங்கண் வானத்' என்பது பிற்காலத்தவர் பாடிய வஞ்சிப்பா,