பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருகின் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் பாடு எனக்கூறிச் செவிக்கு அறிவுறுத்துவது செவியறிவுறுஉ. ாேது. தானே என்னும் ஏகாரம் பிரிநிலை , அஃது அடங்கி வாழ். வார்க்குப் புகழாதலின் வாழ்த்தின்பாற் பட்டது. அது "வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந் தெனாஅ துருகெழு ... ... ... ... ... . மன்னுக பெரும நீ நிலமிசை யானே' (புறம்-சு) 'என்று-மின்சொ வெண்பதத்தை யாகுமதி பெரும” (புறம்-ச0) எனவரும் (செவியுறை) தானே என்றதனான் இன்னகுண்த்தை யாவாயென்று வாழ்த்திப் பின் செவியறிவுறுத்தல் கொள்க. இத்துணையும் பாவின்பெயரும், எண்ணுமுறையும், வரையறையும், அவை பொருட்குரிமையுங் கூறிற்று. ஆய்வுரை : இது, செவியுறையாமாறு உணர்த்துகின்றது. (இன்) செவியுறையாவது, பெரியோர் நடுவண் தன்பெருமை தோன்ற நடவாது தாழ்ந்தொழுகுதல் கடன் எனச் செவியறிவுறுத்தலாகும் எ-து. பொங்குதல் தன் பெருமை தோன்ற ஒழுகுதல். புரையோர். உயர்ந்தோர். நாப்பண் - நடு. அவிதல் - அடங்கி யொழுகுதல், செவியறிவுறுஉ - அறிவுரைகேட்டற்கு உரியாரைத் தனியே அழைத்துச் செவிக்கண் அறிவுறுத்துதல். இது செவியுறை. யெனவும் கூறப்படும், செவியுறை-செவி மருந்து; ஒப்பினாலாகிய பெயர், செவியறிவுறுத்தவண்ணம் பெரியோர் நடுவிற் பெருக்கமின்றி அடங்கியொழுகுவோர் புகழொடும் நெடுங்காலம் நிலைபெற்று வாழ்வராதலால் இது வாழ்த்தியல் வகையின்பாற் படுவதாயிற்று. எம்க ஒத்தா ழிசையும் மண்டில யாப்புங் குட்டமும் நேரடிக் கொட்டின வென்ப. இளம்பூரணம் : என் -எனின். சில செய்யுட்களில் அடி வரையறுத்தலை துதலிற்று.