பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ச தி இ இரவு, புணர்வு, உலாவு என நிரையசை நான்கின் பின்னர்க் குற்றுகரமும், நிரையசை மூன்றின் பின்னர் முற்றுகரமும் வந்து ரைபசையாயிற்று. குறினெடி லொற்றின்பின் வந்த முற்றுகரம் TĚ « مست. உளவேற்காண்க. 'குற்றிய லுகரமு மற்றென மொழிப' (தொல், எழுத். புணரி. 3) என்ற விதியாற் குற்றுகரம் புள்ளிபெற்று நின்றும் புள்ளிபெற்ற ஒற்றுப்போன்று ஒடுங்கி நில்லாது தன்னான் ஊரப்பட்ட மெய்யுந் தானும் அரைமாத்திரைத்தாய்நின்றதேனும், அகன்றிசைத்தலின் ஒற்றென்றலுமாகாது ; ஒருமாத்திரை பெற்ற உயிர்போல அகன்றிசையாமையின் உயிரென வேறோரலகு கொடுத்தலுமாகாது. இதனைச்செயற்பாலது வேறோ ரசையாக்குதலென நோக்கி நேர்பசை நிரைபசை என வேண்டினார் ஆசிரியர், பின்னுள்ளோர் அலகு பெறுமென்று கொண்டாரேனும் அவர்க்கும் அலகுபெறாவென்றுங் கொள்ளவேண்டியவாறும் , தேமா, புளிமாவொழியக் காசு, பிறப்பு, எனக் குற்றுகர வீறாக வேறுதாரணங்கொள்ளவேண்டியவாறும் உணர்க . எனவே குற்றுகரம் அலகுபெறாவாயிற்று. வண்டு, கொண்டி என ஒசை ஒவ்வாமை செவி கருவியாக உணர்க. ஒரு மாத்திரைபெற்ற முற்றுகரம் நேர்பசை திரைபசை யாமோ வெனின் ;- வண்டு வண்டு வண்டு வண்டு’ என் புழிப் பிறந்த அகவலோசை மின்னு மின்னு மின்னு மின்னு’ என்புழியும் பெறப்படுதலானும், வெண்பாட்டிற்றடி வண்டு எனக் குற்றுகர வீற்றா னின்றுழியும் கோலு என முற்றுகர வீற்றா னின்று.ழியும் ஒத்தவோசையவாமாகலானும் அவ்வசைகளாயிற்று. இஃது "எழுத்தளவெஞ்சினும் x - - - - - - - - மொழிப” (செய், 43) என்ற விதியாற் பெறுதும், I . ஈற்றடியிறுதிக்கண்ணே முற்றுகரம் உரியசைக்கு உறுப்பாய் வருதல் மரூஉ வழக்கு என்பர் பேராசிரியர்.