பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப் இ. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் குறிலிணை யுகரம் அல்வழி யான. இஃது, எய்திய தொருமருங்கு மறுத்தது உம் எய்தாத தெய்துவித்தது.ாஉமாம்; வழுவமைத்த தெனினும் அமையும். தனிக்குறிலானாகிய நேரசைப் பின்னும் இருவகையுகரம் வந்து நேர்பசையாதலை விலக்கினமையின் எய்திய தொரு மருங்கு மறுத்ததாம். குற்றுகரங் குற்றெழுத்துப் போன்று அலகு பெறு மென்றமையின் எய்தாததெய்துவித்து வழுவமைத்ததாம். (இ - ள்.) இருவகை உகரமும் இரு குறிலாகி இணைத்த வழி நேர்பசையாகாது (எ - று). கரு, மழு என முற்றுகரம் நேர்பசையாகாது நிரையசை யாயிற்று. என்றார்க்குக், குற்றுகரம் விலக்கியதென்னை ? குறி லிணைவந்த வழிக் குற்றுகரமாகாதென்பது, "நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யிற்றுங் குற்றிய லுகரம் வல்லா றுரர்ந்தே" (தொல், எழு. மொழி.3) என்றதனாற் பெறுதும் பிறவெனின், அது நோக்கிக் கூறினா னல்லன்; ஏற்புழிக்கோடல்’ என்பதனான், ஞாயிறு வலியது என ஒரசைப் பின்னர் வந்தவழி இது குற்றுகரமே யாமன்றே ஆண்டும் அது குறிலிணை யுகரமெனவே படுமென்பது; பட்டக் கண்ணுங் குற்றுகரமேயென வழுவமைத்தவாறு, குறிலிணை யெனக் குற்றுகரத்தையும் உடம்பொடு புணர்த்தல் (665) என் பதனாற் குற்றெழுத்தென வேண்டினானென்பது பெற்றாம். இங்ங்னம் குற்றுகரங் குறிலிணையாகியுங் குற்றுகரமாகி எழுத் தள வெஞ்சினும் அமையுமெனவே நுந்தையென்னும் முதற்கட் குற்றுகரமுங் குற்றெழுத்துப் போன்று அலகுபெறும் எழுத்தள வெஞ்சினுமென்பது கொள்க. இஃது ஒன்றினமுடித்த முன்னின முடித்தல் (665) என்னும் உத்திவகை. 1. குறிலினையுகரம் - கரு, மழு என்றாற்போன்று இருகுறிலாய் இணைந்த உகரம் குற்றியலுகரம் குறிலிணையாய் வாராதாயினும் ஞாயிறு வலியது என்றாற் போன்று ஒரசையின் பின் வந்தவழி அதுவும் குறிலிணையுகரம் எனவே படும் என்பதுபட அவ்வழிவரும் குற்றுகரத்தையும் குறிலிணையுகரம் எனவே கொள்ளுமாறு உடம்பொடு புணர்த்தல் என்பதனால் குற்றெழுத்தெனவே கூறினார் ஆசிரியர் என்பதும், அங்ங்ணங் கொள்ளும் வழி நுந்தை' என்னும் மொழிமுதற்குற்றியலுகரமும் மாத்திரை குறைந்த திலையிலும் குற்றெழுத்துப் போன்று அலகுபெறும் என்பதும் இவ்வுரைப்பகுதியால் இனிது புலனாம்.