பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் يوبي E رقم இடுதிரை மணவினும் பலரே சுடுபிணக் காடுபதி யாகப் போகித் தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா துடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்க லுண்மை மாயமோ அன்றே கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் உப்பிவாஅ அவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோன் ஈயப்பெற்று நிலங்கலனாக விலங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் துறந்தே" (புறம், ங் காங்) இதனுள், 'உப்பிலாஅ அவிப்புழுக்கல்” என்பது முதலாக மூன்றடியும் வஞ்சியடி. இனி வஞ்சிப்பா ஆவது வஞ்சியுரிச்சீரானும் ஏனைச்சீரானும் இருசீரடியானும் முச்சீரடியானுந் துரங்கலோசையானும் வந்து தனிச்சொற் பெற்று ஆசிரியக் சுரிதகத்தான் இறுவது. இதற்கு இலக்கணம்: 'வஞ்சிச் சீரென வகைபெற் றனவே வெண்சி ரல்லா மூவகை யென்ப" (தொல், செய். க.க) 'தன்பா வல்வழித் தானடை வின்றே" (தொல். செய் உ0) 'வஞ்சி மருங்கின் எஞ்சிய வுரிய (தொல், செய் உக) 'வஞ்சி யடியே இருசீர்த் தாகும்” (தொல், செய் சக.) “முச்சீ ரானும் வருமிடன் உடைத்தே' (தொல். செய்.சரு) 'வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே” (தொல். செய், அசு) ன்பனவற்றாற் கொள்க. இப்பா இருசீரடி வஞ்சிப்பா, முச்சீரடி வஞ்சிப்பா என இருவகைப்படும்.