பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஅஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் உம்மை இறந்தது தழிஇயிற்று. உ-ம். மண்ணார்ந் திசைக்கு முழவொடு கொண்டதோள் கண்ணா துடன் வீழுங் காரிகை கண்டோர்க்குத் தம்மோடு நிற்குமோ நெஞ்சு’ எனப் பரிபாடல் வெண்பாவுறுப்பான் வந்தது “ஆயிரம் விரித்த வணங்குடை பருந்தலை தீயுமிழ் திறலொடு முடிமிசை யனவர' எ-து, வெண்டளையும் ஆசிரியத்தளையும் விராஅய்த் துள்ளலோசைபடவுங்கூறப்படுதலின் இது பாவென்னு மியனெறியின்றிப் பொதுவாய்நின்றது கலிக்கும் இதற்கும் வேறுபாடுள என்பது கலிக்கோதிய இலக்கணங்கள் இதற் கின்மையானும் ஆசிரியர் இவ்வாறு வேறுகூறலானும் பெறுதும்.2 ஆய்வுரை : இது, பரிபாடற்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ஸ்) பரிபாடல், முற்கூறிய வெண்பா வுறுப்பான் வருதலே யன்றித் தொகை நிலையும் விரியுமாகக் கூறிய பா நான்கனுள் இன்ன பா என்றறியப்படும் இயல்வழியின்றிப் பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றற்கும் உரியதாகும் என்பர் ஆசிரியர் எ - று. பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றலாவது, ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி, மருட்பா என்றோதப்பட்ட எல்லாப் பாவின் உறுப்பும் உடையதாதல். ளயின. கொச்சகம் அராகஞ் சுரிதகம் எருத்தொடு செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும். இளம்பூரணம் : என்-எனின். இதுவுமது. 1. பரிபாடல் முற்கூறியபடி வெண்பா யாப்பிற்குச் சிறப்புரிமை யுடையதாக நிற்றலேயன்றி மேற்கூறிய நால்வகைப் பாவிற்கும் பொதுவாய் நிற்றற்கும் உரித்து என்றாராதலின் பொதுவாய் நிற்றற்கும்' என்ற உம்மை இறந்ததுதழிiஇய எச்சவும்மையாயிற்று. 2. கவிப்பாவிற்கு ஒதிய இலக்கணங்கள் பரிபாடற்கு இல்லாமையாலும் தொல்காப்பியனார் பரிபாடலைக் கலிப்பாவின் வேறு பிரித்துக் கூறுதலாலும் கலிப்பாவிற்கும் பரிபாடற்கும் வேறுபாடு உள்ளன என்பது பெறப்படும்.