பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ੰrੇ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் 'அராகம் என்பது, ஈரடியானும் பலவடியானும் குற்றெழுத்து நெருங்கிவரத் தொடுப்பது' என்பர் இளம்பூரணர். 'குறிலிணை பயின்ற அடி அராகமெனப்படும்’ எ ன் பர் பேராசிரியர், சுரிதகம் என்பது, ஆசிரிய வியலினாலாவது வெண்பா வியலினாலாவது பாட்டிற் கருதிய பொருளை முடித்து நிற்பது, இதனை அடக்கியல் எனவும் வழங்குவர். "எருத்தென்பது இரண்டடி இழிபாகப் பத்தடிப் பெருமை. யாக வருவதோர் உறுப்பு. பாட்டிற்கு முகம் தரவாதலானும் . கால் சுரிதகமாதலானும், இடைநிலைப் பட்டாகிய தாழிசையும் கொச்சமும் அராகமும் கொள்ளக் கிடத்தலின், எருத்து என்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராக வேண்டுமாதலான் இவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல் வேண்டுமென்று கொள்க’ என்பர் இளம்பூரணர், எருத்து என்பது தரவு' என்பர் பேராசிரியர். எம்.அ சொற்சீ ரடியும் முடுகிய லடியும் அப்ப நிலைமைக் குரிய வாகும். இளம்பூரணம் : என்-எனின். இதுவுமது. (இ - ள்.) சொற்சீரடியும் முடுகியலடியும் பரிபாடற்கு உரிய வாகும் என்றவாறு.1 சொற்சீரடியாவது வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். முடுகியலாவது ஐந்தடியானும் ஆறடியானும் ஏழடியானுங் குற்றெழுத்துப் பயிலத் தொடுப்பது (கக அ) இதுவும் பரிபாடலுறுப்பு உணர்த்துகின்றது. (இ - ள்) எண்ணப்பட்ட இரண்டும் பரிபாடற்குள்ள உறுப். பாய் வரும் (எ - று). 1. அப்பா' என்புழி 'அ' என்னுஞ்சுட்டு, மேற் குறித்த பரிபாடலைச் கட்டி நின்றது.