பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ளம்அ ఉfrఉf # சொற்சீரும் முடுகியலுமென்னாது அடியென்றதனான் மேற் கூறிய அடியொடு தொடர்ந்தல்லது வாராவென்பதாம். சொற் சீரடியாமாறு முன்னர்ச் சொல்லுதும். முடுகியவடியென்பது முடுகியலோடு விராய்த் தொடர்ந்தொன்றாகிய வெண்பாவடி2 அராகமென்பது தாமே வேறு சில அடியாகி வருவன. இவை யன்றிக் குறிலிணை பயில்வன முடுகியலென்வுங் குறிலிணை விரவிவருவன அராகமெனவுஞ் சொல்லுவாரும் உளர்.4 முடுகு வண்ண-மடியிறந் தோடி யதனோ ரற்றே" (தொல்-செய். 233) என்பவாகலின் மேலதே யுரை. 'உரிய வென்றதனான் இத்துணை பயின்றுவாரா இவ் விரண்டுங் கலிப்பாவினுளென்பது கொள்க. எனவே, அராக வுறுப்புத் தேவபாணிக்கல்லது அக்கலிக்கண் யாண்டும் வாரா தாயிற்று.5 《占2–2–) 1. சொற்சீர், முடுகியல் என்ற அளவிற் கூறாது சொற்சீரடி யும் முடுகியவடியும் என அடியொடு சார்த்திக் கூறினமையால், சொற்சீராதலும் முடுகியலாதலும் ஆகிய இவை மேற்குறித்த அடியொடு கூடியல்லது தனித்துவாரா என்பதாம் . 2. சொற்சீரடி யென்பது வருகின்ற சூத்திரத்துட் கூறப்படும். முடுகியற்றன்மையொடு கலந்து ஒன்றாகிய வெண்பாவடி இங்கு முடுகியலடி எனப்பட்டது. 3. முடுகுவண்ணம் என்பது நாற்சீரடியின் மிக்கு ஒடி அராகந்தொடுத்து வருவது. 4. நாற்சீரடியுட் குற்றெழுத்துப் பயின்று வருவது அராகம் எனவும், நாற்சீரடியின்மிக்குக் குற்றெழுத்துப்பயின்று வருவது முடுகியல் எனவும் எனவும் கொள்ளப்படும். இவ்வுறுப்புக்கள் வண்ணவகையால் முறையே உருட்டுவண்ணம் முடுகுவண்ணம் எனவும் வழங்கப்படுமென்பது. உருட்டு வண்ணம் அராகந் தொடுக்கும் (செய். உங். க) எனவும், - 'முடுகுவண்ணம் அடியிறந் தோடி யதனோரற்றே (செய். உங்- உ) எனவும் வரும் இவ்வியற் சூத்திரங்களாள்.அறியப்படும் எனவே குறிலினை பயில் வன முடுகியலெனவும் குறிலினை விரவி வருவன அராகமெனவும் கூறுவார். கூற்று ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு முரணானதாதல் புலனாம். 5. சொற்சீரடியும் முடுகியலடியும் பரிபாடற்கு உரிமையுடையன. எனவே கலிப்பாவில் அத்துணை பயின்றுவாரா எனவும் அராகவுறுப்பு கலிப்பாவின்கண் தேவபாணிக்கல்லது அக்கவிக்கண்யாண்டும் வாராவெனவும் கூறுவர் பேராசிரியர்.