பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ளருஅ அசிரு இதனானே ஆறென்பது உம் ஒரளவியலாயிற்று. (கசுச) நச்சினார்க்கினியம்: இது நான்கு பாவிற்கு மளவு முற்கூறிய அளவிற் படாதன கூறுகின்றது. (இ ள்.) அகமும் புறமுமாகிய எழுநிலத்திலுந் தோன்றிய செய்யுளை யாராயின் அடிவரையின்றி வரும் இலக்கணத்தன ஆறென்று கூறுவர் புலவர். எ-று. எழுநில மென்றதற்குப் பாட்டு உரைநூல் முதலியனவுமாம்." ஆய்வுரை : இஃது அடிவரையறையில்லாத செய்யுட்கள் இவையென வரையறுத்துணர்த்துகின்றது. (இ-ள்) எழுவகை நிலத்தும் தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரையறையில்லாதன ஆறு என்று கூறுவர் ஆசிரியர் என்று. இங்குக் குறிக்கப்பட்ட எழுநிலம் என்பன அடுத்து வரும் நூற்பாவில் விரித்துரைக்கப்படும் பாட்டு, உரை, நூல், வாய் மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன என்பர் இளம்பூரணர்; அகமும் புறமுமாகிய எழுவகைத்திணைகள் என்பர் பேராசிரியர். - ளருஅ. அவைதாம் நூவி னான உரையி னான நொடியொடு புணர்ந்த பிசியி னானகி ஏது துதலிய முதுமொழி யான மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பி னான. இனம் பூரணம்: என்- எனின். மேற்சொல்லப்பட்ட அறுவகையுமாமாறு உணர்த்துதல் துதலிற்று. 1. எழுநிலத்துத்தோன்றிய செய்யுட்களுள் அடிவரையில்லாதன ஆறு: எனக்கூறிய இவ்விதியும் அளவியல் என்னும் செய்யுளுறுப்பின் பாற்படும் என்பதாம். 2. முற்கூறி என்றிருத்தல் பொருத்தம். 3. இங்கனம் கொள்வோர் இளம்பூரணர். 4. இத்தொடர்க்கு நொடிதல் மாத்திரையாகிய பிசி" எனப்பொருள் கொள்வர் பேராசிரியர். நொடியாவது, புனைந்துரை வகையாற் படைத்துக் கூறப்படுவது. நொடியொடு புணர்ந்தபிசி எனவே பிசிக்கு நிலைக்களம் நொடியென்பது பெறப்படும்.