பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரும் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ - ள்.) மொழி சிதைத்து எமது பொருடந்து ஒற்றுமைப் பட்டு நிற்பதோர் சொல்லைப் பொருளைக்கெடுத்து : (முதல்) தனிக்குறில் - முதல் நின்ற எழுத்தைத் தனிக்குறிலாக்கின்: முதலசையாகாது எனது அது நேரசையாகாது: எ - று. எனவே, பொருள் தந்து ஒற்றுமைப்பட்டு நில்லாது விட்டிசைத்து நின்றுழி நேரசையாம் என்றவாறாயிற்று. புளிமா என்றவழிப் புளியென்று ஒற்றுமைப்பட்டுநின்ற சொல்லைச் சிதைத்து முதல் நின்ற பகர உகரத்தை நேரசையாக அலகிடப்படாது. இனி விட்டிசைத்து நேரசையாங்கால் ஏவல், குறிப்பு, தற்சுட்டு, வினா, சுட்டு என ஐந்து பொருளின்கண் விட்டிசைத்து நேரசையாம். உதாரணம் : “வெறிகமழ் தண்புறவின் வீங்கி யுகளு மறிமுலை யுண்ணாமை வேண்டிப் - பறிமுன்கை அ உ மறியா வறிவி லிடைமகனே நொஅலைய னின்னாட்டை நீ” என்பது ஏவல். அ உ என்பது அகரந் தன்னையே சுட்டுதலிற் றற்சுட்டு. "அ ஆ விழந்தானென் றெண்ணப் படும்" (நாலடி. 9) என்பது அருட்குறிப்பு. “அ அவனும், இ இவனும், உ உவனும்” என்பது சுட்டு. எ எவன்’ என்பது வினா. உரையிற்கோடல்’ என்பதனான் ஐந்திடத்தும் விட்டிசைத்தல் கொள்க.? 1. 'மொழிசிதைத்துத் தனிக்குறில் (ஆக்கின் அது) முதலசை ஆகாது' எனவேண்டுஞ் சொல் வருவித்து உரை வரையப்பட்டது. மொழி சிதைத்தலாவது, குறிலிணையாகவும் குறில் நெடிலாகவும் ஒற்றுமைப்பட்டு இயைந்து பொருள்தந்து நிற்கும் சொல்லின்கண்ணே அதன் பொருள் கெடுமாறு குற்றெழுத்தினைத் தனியே பிரித்து அலகிடல். 2. தனிக்குறில் விட் டிசைக்குமிடம் ஏவல், குறிப்பு, தற்சுட்டு என மூன்று என்றார் யாப்பருங்கலவிருத்தியாசிரியர். அம்மூன்றுடன் கட்டும் வினாவும் ஆகிய இரண்டையுஞ் சேர்த்து ஐந்து எனக் கொண்டாம் நச்சினார்க்கினியர் ஏவல் குறிப்பே தற்சுட்டு’ என்புழி ஏகாரம் மிகுத்துக் கூறிய அதனால், சுட்டின் கண்ணும் வினாவின்கண்ணும் ஒருசார் தனிக்குறில் மொழிமுதற்கண் வந்து நேரசையாம். என்னை?