பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=###" శ్రీr தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் r பென்பது, முதுமொழி யென்னும் செய்யுள்வகை பற்றிய இவ்விலக்கணத்தால் இனிது விளங்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய பழமொழி நானுாறும் திருநாவுக்கரசர் அருளிய பழமொழித் திருப்பதிகமும் ஏது நுதலிய முதுமொழி' என்னும் இச்செய்யுள் வகைக்குச் சிறந்த இலக்கியங்களாகும். எனக நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்: மறைமொழி தானே மந்திரம் என்ப, இாைம்பூரணம் : என் எனின். மந்திரம் ஆமாறு உணர்த்துதல் துதலிற்று. (இ - ள்.) நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணை யாற் சொல்லப்பட்ட மறைந்த சொல் மந்திரமாவ தென்ற iெf இ. அது வல்லார்வாய்க் கேட்டுணர்க.2 (கனக) இது, மந்திரச் செய்யுளுணர்த்துதல் நுதலிற்று. (இ-ஸ்). நிறைமொழி மாந்தரென்பது, சொல்லிய சொல் லின் பொருண்மை யாண்டுங் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையராவார். ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத் தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொட ரெல்லாம் மந்திரமெனப்படும். (எ-று). அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. தானே'யென்று பிரித் தான் இவை தமிழ்மந்திர மென்றற்கும் பாட்டாகி அங்கதமெனப் படுவனவும் உள, அவை நீக்குதற்குமென உணர்க. அவை, 1. கிளந்த என்பது, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம், 2. அது வல்லார் என்றது, நிறைமொழிமாந்தர் கூறிய மறைமொழியாகிய மந்திரத்தினைப் பயின்று வல்லவர்களை. இத்தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றியமைந்தது, “நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (28) எனவரும் திருக்குறளாகும். - 3. நிறைமொழி மாந்தராவார், அருளிக்கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பிறழாது எய்துவிக்கும் மொழியினையுடைய தவவலிமிக்க சான்றோர். 4. இங்குக் கூறப்படுவன தமிழ்மத்திரம் என்பதனை வற்புறுத்தற்கும். இவை பாட்டுப்பெற்று அங்கதம் என்ற பெயரால் வழங்கப்பெறுதலும் உண்டென் பதற்கும் மறைமொழிதானே' என ஏகாரத்தாற் பிரித்துரைத்தார்.