பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్క్ # 1 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கந்திருவ வழக்கம் மறையோ ரொழுகிய நெறியதுவாகலான் 'மறையோராறு’ என்றானென்பது. எனவென்பது, வினை யெச்சம். எனவே, பாங்கனுந் தோழியும் உணர்ந்தவழியும் அது மறையோர் வழித்தென்றவாறு. காமப்புணர்ச்சி நிகழ்ந் தன்றி இடந்தலைப்பாடு நிகழாதெனவும் அவ்விடந்தலைப்பாடு பிற்பயத்தலரிதென்பது அவள் ஆயத்தோடுங் கூடிய கூட்டத் தான் அறிந்த தலைமகன் பாங்கனை உணர்த்தி அவ னாற் குறை முடித்துக் கோடலுந் தன்வயிற் பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யானாகலின் அதன் பின்னர்த் தோழியாற் குறைமுடித்துக் கோடலுமென இந்நான்கும் முறையான் நிகழுங் களவொழுக்கம்2 (எ - று). “வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலிதல் ஆக்கஞ் செப்ப னானுவரை யிறத்தல் நோக்குவ வெல்லா மவையே போறன் மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றச் சிறப்புடை மரபினவை... ... > * (தொல்-கள:9) என்பனவுங் கைகோ ளாகாவோவெனின்... ஆகா; கைகோ ளென்பது ஒழுகலாறாகலான். அவை அவற்றுட் பிறந்த உள்ள நிகழ்ச்சி ஒன்றொன்றனிற் சிறந்து பெருகியக்கால் அவ்வப்பகுதி யாகுமென க் கொள்க. மற்றுக் களவியலுள், "ஆங்ங்ணம் புணர்ந்த கிழவோன் றன்வயிற் பாங்கி னோரிற் குறிதலைப் பெயலும் பாங்கிலன் றமியோ ளிடந்தலைப் படலும்” (இறையனார் :3) எனப் பாங்கற்கூட்டம் முற்கூறியதாலெனின்:- இது கைகோள் கூறிய இடமன்மையின் முற்கூறினும் அமையுமென்பது. மற்று; இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைமனைப் பாங்கன் கண்டு இவ்வேறுபாடு எற்றினா னாயிற்றென்று வினாவுமன்றே? அதனாற் பாங்கற்கூட்டம் நிகழ்ந்த பின்னரன்றி இடந்தலைப் 1. மறையோர் ஒழுகிய நெறி கந்தருவமாதலின் அது ம்றையோராறு எனப்பட்டது என்றார் பேராசிரியர். இங்கு மறை என்றது. கந்தருவ வழக்கத்தைக் குறியாது களவொழுக்கத்தையே குறித்ததாதலின் இவ்விளக்கம் பொருத்த முடையதாகத் தெரியவில்லை. 2. இறையனார் களவியலுரை நோக்குக.