பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஉக தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எஅக இடைச்சு மருங்கிற் கிழவன் கிழத்தியொடு வழக்கியல் ஆணையிற் கிளத்தற்கும் உரியன். இனம்பூரணம் : என்-எனின். இது தலைவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் துதலிற்று. (இ-ள் ) தலைவியை யுடன்கொண்டுபோம் இடைச்சுரத் தின்கண் தலைவியைத் தலைவன் வழக்குநெறி யாணையானே கூறுதற்குரியன் என்றவாறு. உம்மை எதிர்மறை.2 ஆணையென்பது ஆக்கினை. வட மொழித் திரிபு. மெல்லிய காம நிகழுமிடத்து ஆக்கினை கூறப்பெறானாயினும் அவ்விடத்து வேண்டுமென்பது எடுத் தோதப்பட்டது: உதாரணம் 'நீவிளை யாடுக சிறிதே யானே மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி அமர்வரின் அஞ்சேன் பெயர்க்கு வென் துமர்வரின் மறைகுவன் மா.அ. யோளே” - (நற்றிணை. டிசு உ) என்பதனுட் கண்டுகொள்க. மெல்லிய மகளிர்முன் வன்மை கூறலாகாமையின் இது வழு வமைத்தவாறு. (తతత్;} பேராசிரியம் : இதுவும் கூற்றுவிகற்பம்ே கூறுகின்றது. (இ~ள்.) இடைச்சுரத்து உடன்போகிய கிழத்தியொடும் கிழவன் நீதிநூல் வகையாற் கிளத்தற்கு முரியன் (எ. று). 1. கூறுதற்கும் உரியன்' என்றிருத்தல் வேண்டும். 2. உம்மை எதிர்மறை என்றமையால் கூறாமையே பெரும்பான்மை என்றாராயிற்று. 3. அன்புடைய தலைவியின் உள்ளத்திலே மலரினும் மென்மையினதாகிய காமவுணர்வு நிகழுமிடத்து வன்சொல்லாகிய ஆணைமொழியினைத் தான்கூறுதல் முறையன்றாயினும் அவளது மனக்கலக்கத்தினைப் போக்குதல்வேண்டி இவ் விடத்து, வன்சொல்லாசிய ஆணைமொழியினைத் தலைவன் கூறுதற்கும் உரியன் என்பது இச்சூத்திரத்தால் எடுத்தோதப்பட்டது.