பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/765

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் என்னும் பாட்டு, தோழியைத் தூதுவிடுவாளாதற் பயன்பட வந்தது. இவ்வாறெல்லாப் பாட்டும் பயனுறுப்பாகவன்றி! வாரா வென்க. இவை புறத்திற்கும் ஒக்கும். (2–Osh.) ঞ্জিওঁ-ওঁ কয় ৰাষ্ট্ৰ গুষ্ট কf u to : இது பயனென்னும் உறுப்புக் கூறுகின்றது. (இ-ன்.) இது மிகவும் பயக்கும் இதனானெனத் தொகுத்துக் கூறப்படும் பொருளும் பயனென்னு முறுப்பாம். எ-மு. உ. ம். “மாறாக் காதலர். மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியாம் வாழு மாறே’’ இது தோழியைத் தூதுவிடுதல் பயனாகவந்தது. இது புறத்திற்கு மொக்கும். இங்ங்ணம் பயனுறுப்பாகவே செய்யுள் வருமாறுணர்க 2 . ஆய்வுரை : இது, பயன் என்னும் உறுப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) யாதானும் ஒரு பொருளைப் பற்றிக் கூறியவழி இதனாற் போந்த பயன் இதுவென விரித்துக் கூறாது முற்*சி" சொல்லினாலே தொகுத்துணரவைத்தல் பயன் என்னும் உறுப்பாம் எ.று. எனவே சொல்லிய சொல்லாற் பிறிதொன்று பயப்பச் செய்தல் பயன் என்னும் உறுப்பு என்பது பெறப்படும். 'இதன்மாறென்னும்: என்பது இளம்பூரணர்கொண்ட பாடம். நச்சினார்க்கினியருரையிலும் இப்பாடமே காணப்படுதலால் பேராசிரியர் கொண்ட பாடமும் இதுவே யெனக் கொள்ளுதல் பொருத்தமாகும். இதன்மாறு.இதனான். மாறு என்பது ஏதுப்பொருட்டாய இடைச்சொல். நெடுமானஞ்சி நீயருளன்மாறே (புறம் கஉ) என இச்சொல் இப்பொருளில் ஆளப்பெற்றுள்ளமை காண்க. } . பயனுறுப்பாகவன்றி-பயனை உறுப்பாகக் கொண்டன்றி. 2. இதுவும் பேராசிரியருரையை அடியொற்றியதே. இதன் மாறு என இளம்பூரணருரையிலுள்ள பாடம்ே. நச்சினார்க்கினியருரையிலும் உள்ளது. இதன்மாறு.இதனான்; மாறு என்பது காரணப் பொருளிற் பயிலும் இடைச் சொல். சோறுபட நடத்தி நீ துஞ்சாய் மாறே. (புறம் உ.உ) என இச்சொல் இப்பொருளிற் பயின்றமை காண்க.