பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/778

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உனக 35, 3ir 6?" வண் வரினுமென்றதனால் நிலம் நீர்தி வளி முதலாயினவும் பிசி" யுட்கண் வருமிடத்துத் திறப்பாடுடைத்தாக ஆராய்ந்து திதி தமக்கேற்ற பண்போடும் பொருந்திய மரபோடும் முடியின், அசி வாறு திறப்பாடுடைத்தாய் வருவது துறையென்று கூறப்படும் என்றவாறு. (உoக) இது, துறையென்னு முறுப்புணர்த்துகின்றது. (இ-ஸ்) ஐவகை நிலத்திற்கும் உரியனவெனப்படும் பல்வேறு வகைப்பட்ட மக்களும் மாவும் புள்ளும் ஒதிவந்தவாறன்றிப் படைத்துச் செயினும் அவ்வத்திணைக்கேற்ற இலக்கணமும் வரலாற்று முறைமையும் பிறழாமைச் செய்யின் அது மார்க்க: மெனப்படும் (எ-று). மார்க்கமெனினும் துறையெனினும் ஒக்கும்.

  • ஊர்க்கா னிவந்த பொதும்பரு னிர்க்கால்” (கலி 56) என்னுங் கலியினுள்,

"கொழுநிழன் ஞாழன் முதிரிணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை” என, நெய்தற் றலைமகள்போலக் கூறி அவளை மருதநிலத்துக்கண்டான்போல, “ஊர்க்கா னிவந்த பொதும்பருள்” எனவுஞ் சொல்லிப் பின் குறிஞ்சிப் பொருளாகிய புணர்தலுரிப் பொருளான் முடித்தான்; இவ்வாறு மயங்கச் செய்யினுங் குறிஞ்சித் துறைப்பாற்படச் செய்தமையின் அத்துறையுறுப்பான் வந்ததென்பது. இதுவும் மேலைப் பொருள்வகைபோலப் புலவராற் செய்துகொள்ளப்படுவதாகலான் அதற்குப் பின் வைத்தானென்பது. மற்று,

  • எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்” (தொல்-அகத்: 19)

என்றதனான், இது முடியாதோவெனின், அது கருப்பொருண் மயங்குதற்குக் கூறினான். இது மக்களேயன்றித் தலைவனுந் தலைவியும் மயங்குமாறும் நான்கு திணையும் ஒன்றொன்றனோடு மயங்குமாறுங் கூறி அது புலவராற் செய்துகொள்ளுவதோர்