பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உள உ # తFr ః) நிமித்தம் உரிப்பொருளாக முடித்தான். இவ்வாறு மயங்கலுங் குறிஞ்சித்துறைப்பாற்பட்ட துறையுறுப்பான் வந்ததென்க. இது ஒதிய இலக்கணமன்றாயினும் முற்கூறிய பொருள்வகைபோற் புலவர் செய்ததோருறுப்பு. இதுவுங் கொள்ளப்பெறுமென்றார். இது புறத்திற்கும் ஒக்கும். < }, fiঞ্চয় কক্স " : இது, துறையாமாறு இதுவென வுணர்த்துகின்றது. (இ-ள்) ஐவகை நிலத்திற்கும் உரியவெனப்படும் பல்வேறு வகைப்பட்ட மக்களும் விலங்கு பறவை முதலியவும் தம்மில் மயங்கிவரினும் அவ்வத்திணைக்கேற்ற இலக்கணமும் வரலாற்று முறைமையும் பிறழாமல் ஒரு துறையின்பாற்படச் செய்தல் துறையென்னும் உறுப்பாம் எறு. எனவே, திணைக்குரிய முதலும் கருவும் முறை பிறழ வந்தாலும் இஃது இதன்பாற்படும் என்று ஒரு துறைப்பட வகுத்தற்கு ஏதுவாகியதோர் கருவி அச்செய்யுட்கு உளதாக அமைத்தல் துறை யென்னும் உறுப்பாம் என்றாராயிற்று. உளஉ. அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிய பாட்டியல் வழக்கின் இனம் பூரணம் : என்-எனின். நிறுத்தமுறையானே மாட்டேறு உணர்த்துதல் நுதலிற்று.” (உ.உC) இது, மாட்டென்னும் உறுப்புணர்த்துகின்றது. (இ.ஸ்) பொருள் கொள்ளுங்கால் அகன்று பொருள் கிடப்பச் செய்யினும் அணுகிக் கிடப்பச் செய்யினும் இருவகையானுஞ் சென்று பொருள் முடியுமாற்றாற் கொணர்ந்துரைப்பச் 1. ஊர்க்கானிவந்த என்ற கலித்தொகைப் பாடலுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய இவ்வுரை விளக்கம் பேராசிரியர் உரையை அடியொற்றி, யமைந்தமை காண்க. 2. செய்யுளிடத்தே கூறப்படும் பொருள்கள், தொடர்நிலைகளால் சேய்மையிடத்தே நின்ற நிலையிலும் அணுகிய நிலையினும் அவை தம்முள்இயைந்து பொருள்முடியும் வண்ணம் இயைத்துக் கூட்டி முடிக்கும்படி யமைவது மாட்டு என்னும் செய்யுளுறுப்பாகும் என்பது இதன் பொருளாகும்.