பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஎம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் செய்தலை மாட்டென்னும் உறுப்பென்று சொல்லுவர் செய்யுள் வழக்கின் (எறு.) இதுவும் நால்வகைப் பொருள்கோ ளன்றிப் புலவரது வேறு செய்கை; அது, “முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே' (பத்துப்பட்டின: (218-20) என நின்றது. பின்னர், 'வேலினும் வெய்ய கானமவன் கோலினுந் தண்ணிய தடமென் றோளே” (பத்துப்.பட்டின : 300.30.1) எனச் சேய்த்தாகச் சென்று பொருள் கோடலின் அஃது அகன்று பொருள் கிடப்பினும் இயன்று பொருண்முடியத் தந்து உரைத்ததாம்.! "திறந்திடுமின் lயவை பிற்காண்டு மாதர் இறந்து படிற்பெரிதா மேதம் உறந்தையர்கோன் தண்ணார மார்பிற் றமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு” (முத்தொள் ளாயிரம்: 642) என்பது, அணுகிய நிலையெனப்படும்; பிறவும் அன்ன; மாட்டுத லென்பது கொண்டுவந்து கொளுத்துதல், ! 1. பட்டினப்பாலையென்னும் வஞ்சிநெடும்பாட்டினுள் நாம் சென்று பொருளீட்டுங்கால் முட்டாச் சிறப்பிற் பட்டினமே கிடைத்தாலும் வாரிருங். கூந்தல் வயங்கிழையாகிய தலைமகள் மனையிடத்தாளாக அவளைப் பிரிந்து பொருள் தேடுதற்பொருட்டு நின்னுடன் வரமாட்டேன் நெஞ்சமே வாழ்வாயாக' எனத் தன்னெஞ்சினை நோக்கிக்கூறும் நிலையில் அமைந்த 2 18-220 ஆம் அடிகளாகிய தொடரோடு அங்ங்னம் தான் தலைமகளை விட்டுப் பிரிந்து வாராமைக்குக் காரணம் கூறுவதாகிய திருமாவளவன் தெவ்வர்க்கு ஒக்கிய வேவினும் வெய்யகானம் கோவினுந் தண்ணிய தடமென்றோளே” எனவரும் 299-301 ஆம் அடிகளாகிய தொடர் செய்மைக்கண் கிடப்பினும் இயன்று பொருள் முடியச் செய்தமையின், இஃது அகன்று பொருள் கிடப்ப அமைந்த மாட்டு என்னும் உறுப்பாயிற்று. 2. நான்கடியான் இயன்ற இப்பாடலில் தமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக்கதவு திறந்திடுமின்' எனத் திறந்திடுமின்' என முதலடியிலுள்ள வினை நான்காமடியின் இறுதியிலுன்ள கதவு என்னும் செயப்படுபொருளோடு இயன்று முடியச் செய்தமையின் இஃது அணுகிய நிலையில் அமைந்த மாட்டு என்னும் உறுப்பாயிற்று,