பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/783

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஎஉ தொல்காப்பியம்- பொருளதிகாரம் - உரைவளம் துண்பூ னாகந் திளைப்பத் திண்காழ் நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின் குவிமுகி ழிளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்டா தப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென் றேத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச் சூரர மகளி ராடுஞ் சோலை மந்தியு மறியா மரம்பயி லடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் * * * - - - பார் முதிர் பனிக்கடல்’ (திருமுருகாற்றுப்படை) இதனுள் அடிமுதல் மேனியிiறா புள்ளவற்றையுடைய சூரர மகளிர் பலருடனே கிள்ளி, இடையிடுபு, வைத்து, பண்ணி, செரீஇ' இட்டு. வளைஇ, திளைப்ப, கொட்டி, அப்பி, தெறியா, ஏத்திப், பாடி, ஆடும் வெற்பில் அடுக்கத்துச் சோலையிற் காந்தட்கண்ணி மலைந்த சென்னியனென அகன்றும் அணுகியும் மாட்டியவாறுணர்க. இப்பாட்டும் பிறபாட்டுக்களும் இவ்வாறே மாட்டுறுப்பு வருமாறுணர்க. "ஆரிய மன்னர் பறையின்' என்பதுமது. இனிப் பல செய்யுட்கண் வருமாறு சிந்தாமணியுள் யாங்கூறிய வுரைகள் பலவற்றானு முணர்க அருமையும் பெருமையும் உடைய வாய்ப் பரந்த சொற்றொடர்ந்து பொருள் தருவதோ ரின்பம் நோக்கிச் சான்றோர் இம்மாட்டிலக்கணமே யாண்டும் பெரும்பான்மைவரச் செய்யுள்செய்தலிற் பின்தொடர் நிலைச்செய்யுள் செய்தவர்களும் இம்மாட்டிலக்கணமே யாண்டும் வரச் செய்யுள் செய்தார். இதுவும் பொருள் வகைபோற் புலவர் செய்துகொண்டதாயிற்று. ஆய்வுரை : இது, மாட்டு என்னும் உறுப்பு உணர்த்துகின்றது. 1. பத்துப்பாட்டு, கலித்தொகை,சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களுக்கு உரையெழுதியபின் தொல்காப்பியச் செய்யுளியலுக்கு நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார் என்பது இவ்வுரைத்தொடரால் இனிது புலனாதல் காணவுirழ்.