பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/793

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஅை.உ தொல்காப்பியம்- பொருளதிகாரம் - உரைவளம வண்ண மெனப்படுமென்பது: எனவே, இவ்வண்ண வகைக. ளெல்லாஞ் செய்யுண் முழுவதுமே பெறுவனவாகக் கொள்ளக்கிடந்தனவல்ல; இவற்றை உறுப்பென்ற தன்மையாற் கந்திருவ ត្រ ជាអារ៉ាវ៉ៅ கூறியவாறுபோல ஒரு செய்யுளுட்பலவும் வரப் பெறுமென்பதாம்.? அவை, "உலக முவப்ப வலனேர்பு திரிதரு” (திருமுரு: 1 எனவும், 'உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை” (ஐங்குறு-ப: 456) எனவும் வரும். பிறவும் அன்ன. (ங் கரு) ஆய்வுரை : இது, தாஅவண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ஸ்) தாஅவண்ணம் என்பது, எதுகை இடையிட்டு வரத் தொடுக்கப்படுவதாகும் எ-று. ஒன்றிடையிட்டு வருதல் தாவுதலாதலின் இடையிட்டு வந்த எதுகையினை யுடையது தாஅவண்ணம் ஆயிற்று. உளஅ. வல்விசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே. இாைம் பூரனம் : என்-எனின். வல்லிசை வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வல்லெழுத்து மிக்குவருவது வல்லிசை வண்ணமாம் என்றவாறு. "பட்டொட்டி யன்ன தொடர்புமுடப் புன்னைக்கீழ்க் கட்டிட்டுக் கண்ணி தொடுப்பவர் தாழைப்பூத் தொட்டிட்டுக் கொள்ளுங் கடற்சேர்ப்பன் நின்னொடு பட்டொட்டி யுள்ளம் விடாது நினையுமேன் விட்டொட்டி நீங்காதே ஒட்டு.” (யாப்.வி.ப.க. அ.உ) (உ0அ) l, ட்ெடு வருதல் தொடைவேற்றுமை யாவதன்றி வண்ண வேற்றுமையாகாது. ஒருசெய்யுளுட் பல அடி வந்தால் அவை யாவும் இடையிட்டுத் தொடுக்கப்பெறுதல் வேண்டுமென்னும் நியதியில்லை. இடையிட்டுத் தொடுத்த வழி அது தாஅவண்ணம் எனப்படும் என்பதாம். 2. வண்ணவகையாவும் செய்யுள் முழுவதுமே பெறக் கிடப்பன அல்ல; இசை நூலார் வண்ணங் கூறியவாறுபோல ஒரு செய்யுளுள்ளே வண்ணங்கள் பலவருதலும் உண்டு என்பதாம். 3. வல்லெழுத்துப் பயிலும்’ எனப் பாடங் கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். வல்விசை - வல்லோசை,