பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/819

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க00அ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ-ள்.) உருட்டு வண்ணமாவது அராகந் தொடுக்கும் என்றவாறு. உ-ம் "தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்’ (யாப். வி. ப.உகசை) என வரும். (இ ள்.) உருட்டிச் சொல்லப்படுவது அராகமாகலின் அராகந் தொடுப்பது உருட்டு வண்ணமாம் (எ-று). 'உருமுரறு கருவிய பெருமழை தலைஇய’ (அகம் 158) எனவும், 'எரியுரு வுறழ விலவ மலர.” (கலி33) எனவும் வரும். இது நெகிழாது உருண்டவோசையாகலிற் குறுஞ்சீர் வண்ணமெனப்படாது உருட்டுவண்ணமெனப்படு மென்பது.? (உக உ) நச்சினார் க்திரிையம் : இஃது உருட்டுவண்ணங் கூறுகின்றது. (இ-ஸ்) உருட்டுவண்ணமாவது அராகந்தொடுக்குமது எ-று.* உருட்டிச் சொல்லப்படுவது அராகமாதலின், ஞெகிழா துருண்ட வோசைத்தாகலின், இது குறுஞ்சீர்வண்ணத்தின் வேறாம். உ-ம் உருகெழு முருகிய முருமென வதிர்தொறு மருகெழு சிறகொடு மணவரு மணிமயில்” எனவரும்:4 1. அராகம்-முடுகிய்ல், முடுகியலாகவும் நெகிழாது உருண்ட ஒசையின தாக்வும் வருவது உருட்டு வண்ணம்ாகும். - - 2. குற்றெழுத்துப்பயின்று விருதல் குறுஞ்சீர் வண்ணத்திற்கும் அர்ாகத்திற். கும் ஒக்குமாயினும் குறுஞ்சீர் வண்ணம் நெகிழ்ந்த ஒசையதாய் வரும். அதுபோல் இடையறவுபட நெகிழ்தலின்றி விரைந்து உருள்வதுபோலும் ஒசையினதாதலின் அராகத்தொடுத்து வருவதாகிய இது உருட்டு வண்ணம் என்னும் பெயர்த்தாயிற்று. .ே உருட்டுவண்ணம் என்பது, அராகத்தொடைமேல் வருவது’’ என்பர் யாப்பருங்கலவுரையாசிரியர் 4, இங்கு எடுத்துக்காட்டிய அராகவுறுப்பு இவ்வியல் எஉரு-ஆம் சூத்திரவுரையில் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ள செஞ்சுடர் வடமேரு' என்னும் முதற்குறிப்புடைய இடையளவு அம்போதரங்க ஒருபோகிற்கு உரியதாகும்.