பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/833

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கOஉஉ தொல்காப்பியம்- பொருளதிகாரம் - உரை வளம் உ.உக தொன்மை தானே சொல்லுங் காலை! உரை)யாடு புணர்ந்த பழைமை மேற்றே. இாைம்பூரணம் : என்- எனின். நிறுத்தமுறையானே தொன்மைச் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ஸ்). தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழைமைத்தாகிய பொருண்மேல் வருவன. அவை இராம சரிதமும், பாண்டவ சரிதமும் முதலாகியவற்றின்மேல் வருஞ்செய்யுள்,: பேராசிரியம் : இது, தொன்மையுணர்த்துதல் நுதலிற்று. (இ.ஸ்) தொன்மையென்பது உரைவிராஅய்ப் பழைமைய வாகிய கதைப்பொருளாகச் செய்யப்படுவது (எ-று).” அவை பெருந்தேவனாராற் பாடப்பட்ட பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன. நச்சினார்க்கினியம் : இது தொன்மை கூறுகின்றது. இ-ஸ். தொன்மையாவது உரைவிராஅய்ப் பழமையாகிய கதை பொருளாகச் செய்யப்படுவன. எ-று.4 அவை பெருந்தேவனார் செய்த பாரதமும். தகடூர்யாத் திரையும் போல்வன. சிலப்பதிகாரமும் அதன்பாற்படும். 'தொன்றுபட வருஉந் தொன்மைத்தாகலின்' (சிலப் ஊர்காண் 45) எனவும், 1. சொல்லுங்காலை என்ற தொடர் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளில் இல்லை. 2. நெடுங்காலத்துக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பொருளாகக் கொண்டு இயற்றப்பெறும் இலக்கியம் தொன்மை யென்னும் வனப்புடையதாகும் என்பது இளம்பூரணர் கருத்தெனத் தெரிகிறது. 3. தொன்மை - பழமை; என்றது பழைய வரலாற்றைப் பொருளாகக் கொண்டு உரையும் பாட்டும் விரவிய நடையில் இயற்றப்பெற்ற தாலாகும். 4. 'தொன்மையாவது, பழைமைத்தாய் திகழ்ந்த பெற்றி உரைக்கப்படுவனவற்றின் மேற்று' என்பர் யாப்பருங்கல விருத்தியாசிரியர்.