பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/832

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உஉஅ க0 உக செய்யினும் விலக்கின்றென்பது. மற்று மூவடிமுப்பது முதலாயின அம்மை யெனப்படுமோ அழகெனப்ப்டுமோ வெனின்,-தாயபனு வவின்மையின் அம்மையெனப்படாவென்பது இவற்றுள்ளும் ஒரோ செய்யுட்கண்ணே மாத்திரை முதலாகிய உறுப்பும் ஏற்ற வகையான் வருவன அறிந்துகொள்க. ஒழிந்தன (வற்றிற்கும் இஃதொக்கும். (உக சு) இது முறையே அழகு கூறுகின்றது. இ-ள். வழக்குச்சொற்பயிலாமற் செய்யுளுட் பயின்றுவருஞ்: சொல்லானே சீர்த்துப் பொலிவுபெறப் பாடின் அப்பகுதி அழகெனப்படும். எ-று.2 அவ்வகை யென்றதனான் அவை வேறுவேறாக வந்து ஈண்டிய தொகைநிலைச் செய்யுளென்றுணர்க. அவை நெடுந்தொகை முதலிய தொகையெட்டுமாம். அது தலைச்சங்கத்தாரையொழிந்தோர் சிறுபான்மை வழக்கும் பெரும்பான்மை செய்யுட்சொல்லுமாக இவ்விலக்கணத்தாற் செய்தவாறே இக்காலத்துச் செய்யினுமாம். எ-று. தாய பனுவலின்மையின் மூவடிமுப்பது முதலியனவும் அழகின்பாற்படும். இவற்றுள்ளும் ஒரோசெய்யுட் கண் மாத்திரை முதலியவுறுப்பும் இவையும் ஏற்ற வகையான் வருமாறு காண்க : ஆய்வுரை : இஃது அழகென்னும் வனப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) செய்யுளுட் பயின்று வரும் சிறந்த சொற்களால் ஒசையினிதாகச் சீர்பெற யாக்கப்படும் அவ்வகைச் செய்யுள் அழகு என்னும் வனப்பாகும் எ-று. இவ்விலக்கணத்தால் அமைந்தவை அகநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்களாகும். 1. மூவடி முப்பது' என்பது இன்ன நூலெனத் தெரியவில்லை. அது மூன்றடி களால் இயன்ற முப்பது பாடல்களைப் பெற்றமையால் மூவடி முப்பது என்னும் பெயர்த்தாயிற்றுப் போலும். அது இடையிட்டுத் தாவிச் செல்லும் பொருள் வகை பற்றிய இலக்கியமாக அமையாமையின் அம்மை யெனப்படா எனவும் செய்யுள் மொழியாற் சீர் புனைந்தியாத்தமையின் அழகெனப்படும் எனவும் வேண்டுந் தொடர்களை வருவித்து இவ்வுரைப்பகுதியினை யமைத்துக்கொள்ளுதல் பேராசிரியர் கருத்தாக இருக்குமோ என்பது சிந்தித்தற்குரியதாகும். 2. அழகாவது செய்யுட் சொல்லாகிய திரிசொல்லினால் ஒசை இனிய தாக நன்கியாக்கப்படுவது' என்பர் யாப்பருங்கலவிருத்தியுரையாசிரியர் .