பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/848

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உங்க கCங்.எ மேற்கூறியது இசைத்தமிழாகலின் அதற்கு அதிகாரம்பட இதனை ஈற்றுக்கண் வைத்தார். இனி யாப்பருங்கல முதலிய வற்றிற்கூரிய சித்திரகவியினையும் ஈண்டுச் சேரக் கூறுகவெனின் யந்திரமு மந்திரமுமாய்த் தெய்வத்திற்கே யுரியவாகக்கூறும் மிறைக்கவி.இம்முப்பத்துனான் குறுப்பும்போல அகனைந்திற்குரிய சான்றோர் செய்யுட்குறுப்பாய் வாரா வென்றும் அத்திணைக்குரிய மரபு வழுவிற்றென்றுங் கருதித் தொல்காப்பியனார் கூறாமையானும் அவற்ற திலக்கணங்கூறிய ஆசிரியரும் அவற்றிற்கு இலக்கியஞ் சான்றோர் செய்யுட்களுட் காணாமையின் "வடவெழுத்தொரீஇய எழுத்தொடு புணர்த்தி சொல்' லானன்றி வடவெழுத்தாற் பெரும்பான்மைவரச் செய்யுள் தாமே செய்து இலக்கியமாகக் காட்டினா ராதலானும் யாமும் இம்மிறைக்கவி யிலக்கணம் ஈண்டுக் கூறாமாயினாம்.' ஆய்வுரை : இஃது இழைபு என்னும் வனப்பு உணர்த்துகின்றது. (இ-ஸ்) ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்துப் பயிலாமல் குறளடி முதல் ஐந்தடியினையும் ஒப்பித்து ஓங்கிய மொழியால் பொருள் புலப்படச் செய்யின் அச்செய்யுள் இழைபு என்னும் வனப்பினது இயல்பினைப் பொருந்தியதாகும் எறு. ஆங்ங்னம் மொழிதலாவது, முற்சூத்திரத்திற் கூறியவாறு பொருள் புலப்படச் செய்தல். நாலெழுத்து முதல் இருபதெழுத் தின்காறும் உயர்ந்த பதினேழ் நிலத்தின் ஐவகையடியும் முறையானே வரத் தொடுக்கப்பட்ட போந்து போந்து என்னும் 1. யாப்பருங்கல விருத்தி ஆசிரியர் முதலியோர் கூறிய சித்திரகவிகள் யந்திரமும் மந்திரமுமாய்த் தெய்வத்திற்கேயுரியவாகக் கூறப்படுதலானும் மாத்திரை முதலிய முப்பத்து நான்குறுப்புப்போல அகனைந்திணைக்குரிய சான்றோர் செய்யுட்கு உறுப்பாய் வாராமையானும் திணைக்குரிய மரபு வழுவிற்றென்று கருதி ஆசிரியர் தொல்காப்பியனாராற் கூறப்படாமை யானும் அன்னோர் வடவெழுத்தொரீஇய சொல்லானன்றி வடவெழுத் தாற் பெரும்பான்மை வரச் செய்யுள் தாமேசெய்து இலக்கியமாகக் காட்டினாராதலானும் தமிழிலக்கண மரபொடு பொருந்தாத மிறைக் கவிக்கு இலக்கணம் இங்குக் கூறாது விடுத்தோம் என நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம், தமிழ் மரபிற் சிதையாதனவே சான்றோராற் செய்யு ளெனக் கொள்ளத்தக்கன என்னும் அவரது உள்ளக் கருத்தைத் தெள்ளிதிற் புலப்படுத்தல் காணலாம்.