பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/847

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கOங்க தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் நிதனை வெண்டுறைச் செய்யுட்குமுன் வைப்பி னென்னெனின். இஃதிசைப்பாட்டாகலின் இனி வருகின்றது இசைத்தமிழாக லின் அதற்குபகாரப்பட இதனை, இறுதிக்கண் வைத்தா னென்பது, ! (உ.ச.உ) நச்சி னார் க்திரிையம் இஃது இறுதிநின்ற இழைபு கூறுகின்றது.? (இ-ஸ்) ஒற்...து எது வல்லொற்றடுத்த வல்லெழுத்துப் பயிலாமல் குறள்...து எது இருசீர்முதல் எழுசீரடியளவும் அவ் வைந்தடியினையும் ஒப்பித்து. ஓங்கி.ன் எது நெட்டெழுத் துப்போல் ஒசைதரும். மெல்லெழுத்தும் லகார ளகாரங்களுமுடைய சொல்லானே முற்கூறியவாறே தெரிந்த மொழியாற் கிளந்து ஒதல்வேண்டாமற் பொருள் புலப்படச் செய்யும். இழை-கும் இழைபினது இலக்கணம் பொருந்திற்றாம். எ-று. கழிநெடிலடியானும் வருமென்றாரேனும் எழுசீரின் மிகாதென்று கொள்க. ஒப்பித் தென்றதனாற் பெரும்பான்மை நாற்சீரடியான் வருஞ் செய்யுட்கண்ணே யொழிந்த நான்கடியும் வருமென்று கொள்க. அவ்வாறு வருவன கலியும் பரிபாடலும். போலு மிசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்றுணர்க. இவ்வைப்பு இனத்திற்குரியவாதலிற் றேர்தல் வேண்டாது பொருள் தோன்றச் செய்கவென்றார். இத்தொல்காப்பியனார் , இசைத்தமிழ் நெறிக்குரிய இழைபு என்னும் வனப்பாகிய இதனை நாடகத்தமிழ் நெறிக்குரிய புலன் என்னும் வனப்பாகிய வெண்டுறைச் செய்யுளுக்கு முன் வைத்தல் முறையாயினும் இயற்றமிழிலக்கணத்தின் பின் இனிக் கூறத்தகுவது இசைத்தமிழிலக்கணமாதலால் அதற்கு உபகாரப்படுதல் கருதி இதனை இறுதிக்கண் வைத்தார் தொல்காப்பியனார் என்பதாம். 2. "இழைபு என்பது, வல்லொற்று யாதுந் தீண்டாது செய்யுளியலுடை. யாரால் எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட குறளடி முதலியவாய்ப் பதினேழ்நிலத்து ஐந்தடியும் முறையானே உடைத் தாய் ஓங்கிய சொற்களான் வருவது' என்பர் யாப்பருங்கலவிருத்தியாசிரியர். 3. தேர்தல் வேண்டாமற். என்றிருத்தல் வேண்டும். 4. எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட குறளடி முதலாகவுள்ள ஐந்தடிகளும் நாற்சீாடியினை நிலைக்களமாகக் கொண்டனவாதலின் ஒழிந்த நான்கடி என்பன குறளடி, சிந்தடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் நான்கு மாகும். 5. இவை யவிநயத்திற்குரியவாதவிற்' என்றிருத்தல் வேண்டும்.