பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 101 எ.க. அந்த னாளர்க் குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே. இளம்பூரணம் : (இ ள்) அவை நாலுதொழில்; ஈதல், வேட்டல், வேட் பித்தல், ஒதல். பேராசிரியம் : இது மேலதற்கோர் புறனடை (இ-ன்) அந்தணாளர்க்கு உரியவென மேல் (625) ஒதப் பட்டனவற்றுள் முந்நூலும் மனையும்போல்வன அரசசாதிக் குரியவாகியும் வரும் (எ-று) பொருளுமாருள வென்றதனான், அந்தணாளர்க்குரியன வற்றுள் வேள்விக்கலப்பை யொன்றிவருதற் பெரும்பான்மையென உணர்க; ஈண்டு அவற்றை விதந்தோதினான் ஒழிந்த புலனெறி வழக்கினுட் பயிலாமையினென்பது. 2 'அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபி னரசர் பக்கமும் இருமூன்று மாபி னேனோர் பக்கமும்' (தொல்-புறத்:20) பற்றி வாகைப்பொருள் பிறத்தலின் அவற்றைப் புறத்திணை யியலுட் கூறினானாயினும், ஈண்டுத் தழிஇக்கொள்ளப்படும் மரபு வகையானென்பது; என்போலவெனின், 'அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு” (தொல்-எழுத்-நூன் 31) ஒன்றிய வரூஉம் பொருளுமார் உள-பொருந்தவரும் பொருள் c5; Gff $3 $#f6ff göf. ஆர் - அசை. 1. அந்தணாளர்க்கு உரியவற்றுள் முந்நூலும் மணையும் போல் வன அரசர்க்குரியனவாகப் பண்டைத் தமிழிலக்கியங்களிற் கூறப்படவில்லை 2. முந்நூல் முதலாயின அரசர்க்குரியனவாயின் புலனெறிவழக்கிற் புலவர்களாற் குறிப்பிடப்பட்டிருக்கும். இவை புலனெறிவழக் கிற் பயிலாமையின் எனப் பேராசிரியர் குறிப்பிடுதலால் அரசர் பூணுரலனியும் பழக்கம் பண்டைக் காலத்தில் தமிழ்கத் தில் இடம்பெறவில்லையென்பது தெளிவு.