பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் § { } கோதும்பை" என இளம்பூரணரும், பயறு, உழுந்து, கடுகு கடலை, எள்ளு, கொள்ளு, அவரை, துவரை' எனப் பேராசிரி யரும் குறிப்பிடுவர். ' கூலம் எண்வகைத்து; அவை : நெல்லு' புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி என்பர் அடியார்க்குநல்லார் (சிலப்-பதிகம்: அ.வு) (எ.க) அ0 கண்ணியுந் தாரும் எண்ணினர் ஆண்டே. இனம்பூரணம் : (இவள்) வைசிகருக்கும் கண்ணியுந் தாரும் சொல்லப் பெறுமென்றவாறு. இதுவும் அது. (இ-ள்) இவையும் வணிகர் திறத்தன (எ-று) கண்ணியென்பது, சூடும்பூ, தாரென்பது ஒருகுடிப்பிறந் தார்க்குரித்தென வரையறுக்கப் படுவதாயிற்று எண்ணப்படு மெனவே அவரவர்க்குரியவாற்றாற் பலவாகி வரும்; அவை வந்த வழிக் கண்டு கொள்க. ஆய்வுரை : இதுவும் வணிகர்க்குரியன கூறுகின்றது. (இ-ன்) சூடும் பூவாகிய கண்ணியும் குடிப்பிறந்தார்க் குரிய மாலையாகிய தாரும் ஆகிய அவற்றை வணிகர்க்குரியனவாக எண்ணினர் புலவர் எ-று. ஆண்டு-அங்கு என்றது செய்யுளாகிய இடத்தினை. 1. கண்ணி என்பது முடியிற் சூடும் மாலை. தார் என்பது மார்பில் அணிந்து கொள்ளும் மாலை. இந்நுட்பம் கண்ணி கார் நறுங் கொன்றை காமர், வண்ண மார்பில் தாருங் கொன்றை (புறம்-1) என வரும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தில் இனிது புலனாதல் காணலாம். இனி, கண்ணி என்பது, வெட்சி, வஞ்சி முதலிய தொழில்பற்றிச் சூடும் பூ எனவும் தார் என்பது போந்தை, வேம்பு, ஆத்தி முத லாக ஒவ்வொரு குடியிற் பிறத்தார்க்குமுரிய அடையாளப்பூ எனவும் கொள்வர் பேராசிரியர்,