பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் # 3 'பொழிப்பெணப் படுவது பொருந்திய பொருளைப் பிண்ட மாக்க கொண்டுரைப் பதுவே' எனவும், பாடங் கண்ணழிவு காரண மென் றிவை நாடிற் றிரிபில வாகுதல் பொழிப்பே' எனவும், ஒதியவாற்றான் அறிக (சிவஞான பாடியம் சூ-1) எனச் சிவஞான முனிவர் தரும் விளக்கம், தொல்காப்பியம் மரபியல் கoக,கoச-ஆம் சூத்திரங்களுக்குப் பேராசிரியர் வரைந் துள்ள உரைப்பகுதியைத் தழுவியமைந்ததாகும். (கoச) கoடு. சூத்திரத் துட்பொரு வான்றியும் யாப்புற இன்றி யடிையா திAைபவை எல்லாம் ஒன்று உரைட்ட துரையெனப் படுமே. இளம்பூரணம் : உரையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) சூத்திரத்துட் பொருளொழியவும் அந்நூலகத்தில் யாப்பிற்கும் பொருந்த இன்றியமையாதன வெல்லாங்கொணர்ந்து பொருந்த உரைப்பது உரையாகு மென்றவாறு. பேராசிரியம் : இது மேல், * ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளர்ந்த வகைய தாகி’’ (தொல்-மர:98) என நிறுத்தமுறையானே காண்டிகையினை மெய்ப்படக்கிளந்த வகை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மேல், 'பழிப்பில் சூத்திரம் பட்ட பல் பின்’ (தொல், மர: 101) வருதலும், அதுவே ஏதுவும் எடுத்துக்காட்டும் உடைத்தாகி 1. சூத்திரப் பொருளை விளக்குமளவில் நின்று விடாது, காரண மாகிய ஏதுவும், வழக்காகிய நடையும், உதாரணமாகிய எடுத்துக் காட்டும் சூத்திர சுட்டுதலும் என்று இவ்விலக் கணங்களையெல்லாம் தழுவிக்கொள்ளும் நிலையில் இன்றிய மையாது இயைபவையெல்லாம் ஒன்றவுரைப்பது உரையெனப் படுமே என்றார் ஆசிரியர்.