பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 - தொல்காப்பியம் ζωτι: யாப்பினுட் சிதைதலென்பது முதனுாலும் வழக்கு நூலா யின் இழிந்தோர் வழக்கும் வழக்கன்றோவெனக் கூட்டிவிரித்து யாத்துச்செய்யினும், அழான் புழான் (தொல். எழுத்து :316) என்பன போல்வன இக்காலத்திலவென்று களைந்து தொகுத்து யாத்துச்செய்யினுந் தொகைவிரியும் மயங்குமாற்றான் விரிந்தது தொகுத்தலென்னும் நூற்புணர்ப்பினைத் தொகைவிரியெனும் யாப்பெனக் கூறியதல்லாதவழித் தொகுத்து யாத்தே செய்தலும், இம்மூவகை யாப்பினொடு மெய்த்திறங் கூறுவலென மொழி பெயர்த்தலை மயக்கிக் கூறுதலுமெல்லாம் யாப்பினுட் சிதைவே யாம். அது பண்ணும் பாணியும் முதலாயின ஒப்பினும் வல்லோன் புணர்த்த இன்னிசையதன் நீர்மைப்படக் காட்டா வாரம் புனர்ப் பான் புறநீரதாகிய இசைபடப் புணர்த்தல் போல்வதாயிற்று, மற்று இழிந்தோர் வழக்கினைப் பிற்காலத்து உயர்ந்தோருத் தகுதிபற்றி வழங்குபவாகலான் அவையும் அமையாவோவெனின் அவை சான்றோர் செய்யுட்குதவாது; கற்றுணர்ந்தாரும் கற்றுண ராதாரும் மற்று அவை கேட்டே மனமகிழ்வாரைப்பற்றி நிகழ்ந் தனவாயினும், ஒற்றுமைப்பட்டு ஒருவகை நில்லா பெற்ற காலந்தோறும் பிறிது பிறிதாகிக் கட்டளைப்படுத்து நூல் செய் வார்க்குங் கையிகந்து, வரையறை யின்றாமாகலின் அஃது இலக்கணமெனப்படாதென்பது. 1. யாப்பினுட் சிதைதல்என்பன, முதல்நூலும் வழக்குநூலாயின், இழிந்தோர் வழக்கும் வழக்கெனக் கூட்டியுரைத்தல், அழான் புழ்ான் முதலிய் சொல்வழக்குகள் இக்காலத்தில்லையென்று அவற்றை நீக்கித் தொகுத்தல், தொகையும் விரியும் விரவிக் கூறும் நிலையில் விரிந்தது தொகுத்தல் என்னும் நூற்புணர்ப் பினைத் தொகுத்தே யாத்தல், இம்மூவகை யர்ப்புடன் நூலின் மெய்த்திறத்தினையும் கூறுவேன் எனத் தொடங்கி மொழி பயர்த்தலையும் விரவிக் கூறுதல் போல்வன. 2. இழிந்தோர் வழக்கு சான்றோர் செய்யுட்கு உதவாது. கற் றுணர்ந்த சான்றோரும் கல்லாத பொதுமக்களும் அவ்வழக் கினைக் கேட்டு நகையாடுதற் பொருட்டு நிகழ்ந்தனவர்யி னும் அல்விழி வழக்குகள் எல்லா மக்களிடத்தும் ஒற்றுமைப் பட்டு நிற்பன அல்ல. அவை காலந்தோறும் இடந்தோறும் வேறு வேறாகித் திரிபுடையனவாதலின் அவற்றையெல்லாம் ஓர் ஒழுங்குபடுத்து நூல் செய்வார்க்கும் வரையறைப்படுத் தல் இயலாதநிலையில் அவை வரம்பிக்ந்தனவாம். ஆதலின் அத்தகைய இழிவழக்கு இலக்கணமென் ஏற்றுக்கொள்ளப் புடமாட்டாது என்ப்பேராசிரியர் தரும் இவ்விளக்கம், இடம் பெயர்ந்தும் காலங்கடந்தும் அழியாநிலையிலுள்ள தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமைாததாகும்.