பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 2 #5 தோத்தினுள் விதந்துடன் கூறினமையானுமென்பது; இது நோக்கிப் போலும். 'ஈற்றசை யில் வைத் தேகாரம்’ (தொல்-சொல்-இடை, 9) என இடைச்சொல்லினை எழுத்துச்சாரியை பெய்தோதிய கருத் தானே இப்பொருண்மைகொள்ள வைப்பானாயிற்றுமென்பது. மற்று இவை எதிரதுபோற்றலாகாவோவெனின், - அது பொருட்படைக் கண்ணதெனவும் இவை ஆட்சியுங் குறியீடும் பற்றியதோர் பகுதி யெனவும் கூறி விடுக்க, அஃதேற்,குறியீட்டால் ஈண்டாராயானோவெனின்-இவை உத்திவகையாகலானும் அது தானே உத்தியெனப் படுமாதலானும் அதனை ஈண்டு ஆராயா னென்பது. (7) வந்ததுகொண்டு வாராததுணர்த்தல் - பின் னொரு வழி வந்ததுகொண்டு முன்வாராததோர் பொருள் அறியவைத்தல்; அது, ' ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகும்’ (தொல்.எழுத்-உயிர் :2) என்பது. ' எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கு மெஞ்சுபொருட் கிளவி யிலவென மொழிப' (தொல்-சொல்-எச்ச : 43) என, வந்தது கொண்டு மேற்கூறப்பட்ட ஏழெச்சத்திற்கும் மேல் வந்து முடிக்குஞ் சொல் வாராததனை வருமென்றுணர்ந்து கொள்ளவைத்தமையின் இதுவும் அதுவேயாயிற்று. ஆயிரு திணையி னிசைக்குமண சொல்லே' (தொல்-சொல்-கிள : 1) என்றவழித் திணை யென்னும் பெயர் எப்பொருட்கும் எய்துவித்தல் ஒரு சூத்திரத்துள்ளே கோடலின் அதனை அதற்கு இனமென்று கொள்ளப்படும்; பிறவும் அன்ன. (8) முந்து மொழிந்ததன் றலைதடுமாற்று-முன்னொரு காற் கூறிய முறையன்றிப் பின்னொருகால் தலை தடுமாறாகக் கூறுதல்; அது,