பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烧密争 தொல்காப்பியம் (27) பொருளிடையிடுதல் - வேற்றுமைப் பொருளினைச் சொல்கின்ற பொருண்மைக்கிடையே பெய்துசொல்லுதலும், சொல்கின்ற பொருட்கு இயைபுடையதனை ஆண்டுச் சொல்லாது இடையிட்டுப்போய்ப் பிறிதொருவழிச் சொல்லுதலும் போல்வன அவை : முறைப்பெயர்க் கிளவி யேயொடு வருமே” (தொல்-சொல்-விளி : 19) என்றாற்போலச் சொல்கின்ற உயர்திணைப் பெயரிடை விரவுப் பெயர் பெய்துரைத்தலும் போல்வன, வழுவமைக்கின்ற கிளவி யாக்கத்துள் ஒதாது எச்சவியலுட் போக்கி, அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் ' (தொல்-சொல்-எச் : 46) எனச் சொல்லுதலும் போல்வன. தானென் பெயருஞ் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரு மன்றி யனைத்தும் விளிகோ ளிலவே ' (தொல்-சொல்-விளி : 20) என்றவழித், தானென்னும் விரவுப் பெயரினை இடைப்பெய்து விலக்குதலும் வேற்றுமைக் கிளவியோத்தினுட் கூறாது எஞ்சி நின்ற வேற்றுமைத் தொகை முதலிய எச்சங்களை எச்சவிய லுட் சொல்லுதலும் போல்வனவும் அதன்பாற் சார்த்தியுணர்க. (28) எதிர்பொரு ளுணர்த்தல்-தான் கூறிய இலக்கணத் திற் சில பிற்காலத்துத் திரிபுபடினும் படுமென்பது, முதற்கால முதனூலுங் கொண்டுணர்ந்த ஆசிரியன் எதிர்காலத்து வருவது நோக்கி அதற்கேற்றதோர் இலக்கணங் கூறிப்போதல் :

  • மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப புகறக் கிளந்த வஃறிணை மேன '

- (தொல்-எழுத்-மொழி : 49) என்று ஒதிய இலக்கணத்துச் சில பிற்காலத்துக் குறையவருதல் எதிர்பொருளெனப்படும். அதனைத் தான் உணர்ந்து, ' கடிசொ லில்லைக் காலத்துப் படினே * 9. (தொல்-சொல்-எச் : 26)