பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபிகல் 翌3 ஆய்வுரை : (இ-ள்) ஆவும் எருமையும் குழவியென்னும் அவ்வினமைப் பெயரால் வழங்குதலைப் பெறும் எ - று. ஆ-பசு ஆண் பெண் இரண்டற்கும் உரிய பொதுப்பெயர்) 'அது' என்னும் சுட்டு மேற்குத்திரத்திலுள்ள குழவி என்னும் இளமைப் பெயரைச் சுட்டிநின்றது. 《EO) உக. கடமையும் மரையு முதனிலை ஒன்றும், இளம்பூரணம் : (இ-ள்) என்றது, கடமாவும் மரையுங் குழவி எனப் பொருந்தும் என்றவாறு. பேராசிரியகம் : (இ-ன்) இவையும் அப்பெயர்க்கு உரிய (எ-று). குஞ்சரம்போலக்குழவிப்பெயர் பெறுமென்பான் முதனிலை? யொன்று மென்றானென்பது. அவை வந்துழிக் கண்டு கொள்க. ஆய்வுரை : - (இ-ள்) கடமையும் மரையும் முற்கூறிய குழவி என்னும் இளமைப் பெயருக்குப் பொருத்தமுடையதாகும் ன - று. முதல்நிலை-முற்குறித்த குழவி என்னும் பெயர். ஒன்றும்பொருந்தும். (2.8%) உஉ குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும் நிரம்ப நாடின் அப்பெயர்க் குரிய இளம்பூரணம் : (இ-ள்.) என்றது, குரங்கு முதலிய மூன்றும்3 ஆராயுங் காலத்துக் குழவிப்பெயர்க்குரிய என்றவாறு. 1. கடமையும் - உ.வே. 2. முதனிலை- முற்குறித்த குழவிப் பெயர். 3. மூன்றுயிரும் உ.வே.