பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛粤 தொல்காப்பியம் இது முறையாதற்குக் காரணமென்னையெனின் -எண்ணு முறையாற் கூறினாரென்பது; அல்லது உம், எல்லா உயிர்க்கும் இம்முறையானே பிறக்கும் அவ்வவற்றுக்கோதிய அறிவுக ளென்றற்கு அம்முறையாற் கூறினாரென்பது; என்னை அது பெறுமாறெனின். - நேரிதினுணர்ந்தோர் நெறிப்படுத்தினரென் பதனாற் பெறுதும்.1 மற்று, ஒன்றுமுதல் ஐந்திறாகிய பொறியுணர்வு மனமின்றி யும் பிறப்பனபோல வேறு கூறியதென்னையெனின் - ஒரறி வுயிர்க்கு மனமின்மையின் அங்ங்னங் கூறினாரென்பது. அதற்கு உயிருண்டாயின் மனமின்றாமோவெனின், - உயிருடையவாகிய நந்து முதலாகியவற்றுக்குச் செவி முதலாய பொறியின்மை க்ண்டிலையோவென்பது. அவ்வாறே ஒழிந்தவற்றிற்கும் மன வுணர்வில்லை யென்பாரும் மனமுண்டென்பாருமென இருபகுதி யர். அவையெல்லாம் வல்லார்வாய்க் கேட்டுணர்க. அல்லது உம் பொறியுனர் வென்ப தாமே உணரும் உணர்ச்சி, அங்ங்னம் உணர்ந்தவழிப் பின்னர் அவற்றை மனஞ் சென்று கொள்ளுமென்பதென்னையெனின், மனம் ஒன்றினை நினையா நிற்க மற்றொன்று கட்புலனாயக்கால் அதனைப் பொறி யுனர் வுகொள்ள அதன்வழியே மனந்திரிந்து செல்லுமாகலின்; என்னை? மனனுணர்வு மற்றோர் பொருட்கண் நின்றகாலத்துப் பிறபொருட்கட் சென்றதெனப் படாதன்றே? பின்னர் அதனை அறிவித்தது பொறியுணர்வாகலான் அவை தம்மின் வேற்றுமை யுடையன வென்பது. அல்லது ந் தேனெய்யினை நாவின்பொறி உணர்ந்தவழி இன் புற்றுங், கண்ணுள் வார்த்து மெய்யுணர்வுணர்ந்தவழித்துன் 1. ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அவ்வவற்றுக்கோதிய அறிவுகள், மெய்யினால் உற்றறிதல், அதனோடு நாவினாற் சுவைத்தறிதல், அவற்றொடு மூக்கினால் முகர்ந்தறிதல், அவற் றொடு கண்ணினாற் கண்டறிதல், அவற்றொடு செவியி னாற்கேட்டறிதல்,அவற்றொடு மனத்தால் சிந்தித்தறிதல் என இவ்வாறு எண்ணிய முறையானே பிறக்கும் என்பார், நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுதினரே என்றார். உயிருடைய வாகிய நந்து முதலாயவற்றுக்குச்செவி முதலாகிய பொறியுணர்வில்லாமை போன்றே ஓரறிவுயிர்க்கு மனவுணர் வில்லையென்பது கொள்ளப்படும்.