பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 49 பேராசிரியம் : நண்டுந் தும்பியும் நான்கறிவினவெனவும், அந்நாலறிவினை யுடைய கிளையும் பிறப்பும் வேறுளவென்பதுாஉங் கூறியவாறு, (இ-ஸ்.) நண்டிற்குந் துப் பிச் குஞ் செவியுனர்வொழித்து ஒழிந்த நான்கு உணர்வும் உள அவற்றுக் கிளையும் பிறப்பும் பிறவும் உள எ-று. மெய்யுடைமையின் ஊற்றுணர்வும்,இரை கோடலின் நாவுனர் வும், நாற்றங்கோடலின் மூக்குணர்வும், கண்ணுடைமையிற் கண் னுணர்வுமுடையவாயின.நண்டிற்குமூக்குண்டோவெனின், அஃது ஆசிரியன் கூறலான் உண்டென்பது பெற்றாம். இவற்றுக்குக் கிளையென்பன வண்டுந் தேனியுங் குழவியும் முதலாயின. பிறப் பென்னதான்கறிவுடையபிறசாதிகளெனமுற்கூறியவாறேகொள்க. ஆய்வுரை : நாலறிவுயிராமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) நண்டு தும்பி என்பன மெய்யறவுணர்தலாகிய ஊற் றுணர்வும் இரையுண்ணுதலால் நாவுணர்வும் நாற்றம் உணர்தலால் மூக்குனுர்வும் கண்ணுடைமையால் காட்சியுணர்வும் என நான்கறி வுடையன. அவற்றுக்கு இனமும் பிறப்பும் பிறவும்.உள எ-று. 'நண்டிற்கும் தும்பிக்கும் செவியுணர்வொழித்து ஒழிந்த நான் குணர்வும் உள' என்பது இச்சூத்திரத்தால் உணர்த்தப்பட்டது. 'பெரும்பாணாற்றுப்படையில், 'பல்காற் பறவை கிளை செத்தோர்க்கும்’ என்ற அடிக்கு, 'வண்டுகளை தம் சுற்றத்தின் ஒசையாகக் கருதிச் செவிகொடுத்துக் கேட்கும்' என உரையும்: 'நண்டுந்தும்பியும் (மரபியல் க.க) என்னுஞ் சூத்திரத்திற் செவிப் பொறியான் இவை உணர்தல் கூறினாம்” என விளக்கமும் கூறினர் நச்சினார்க்கினியர். இங்கே குறித்த வண்ணம் தொல்காப்பியமரபி யலுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய வுரை இப்பொழுது கிடைத் திலது. சீவகசிந்தாமணி 892, 893 - ஆம் பாடல்களுக்குநச்சினார்க் கினியர் எழுதிய உரையில் மேற்குறித்த மரபியற் சூத்திரவுரைக் குரிய விளக்கம் பின்வருமாறு இடம் பெற்றுள்ளமை காணலாம். 'நண்டுந் தும்பியும் பிறப்பே'(தொல்-மரபியல்:கக)என்று தும்பிக்குச் செவியின்று எனவே, (தும்பியின் இனமாகியசுரும்பு, வண்டு.மிஞறுஆகிய)இவற்றிற்கும்செவியின்றாம்.ஆதலாலேவருத்த மிகுதியான் இவற்றை நோக்கி வாளா கூறியதன்றி. வேறன்று: